ஞானகுரு :
சந்தேகம் இல்லாமல் சாதிதான். உடல் அமைப்பு காரணமாக நீ ஆண் அல்லது பெண் என்று பிரிந்து இருக்கிறாய். வாழும் இடத்தைப் பொறுத்து வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவனாக இருக்கிறாய். பேசும் மொழியைப் பொறுத்து வெவ்வேறு இனத்தவனாக இருக்கிறாய். வணங்கும் ஆண்டவனை முன்னிட்டு வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவனாக இருக்கிறாய். ஆனால் என்ன காரணத்துக்காக சாதி உருவானது..? என்ன காரணத்துக்காக மனிதர்களை இப்படி பிரிக்க வேண்டும்..?
தங்களுக்கு அடிமை சேவகம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட சாதி, இன்னமும் விரட்டபடாமல் இருப்பதுதான் மனிதகுலத்திற்கே அவமானம். அதேநேரம், சாதியை உருவாக்கியதற்கு அடிப்படைக் காரணமாக மதம் இருக்கிறது என்றால், அந்த மதத்தை வேரோடு அழித்தால் மட்டுமே சாதி ஒழியும்.
gyaanaguru.com Changed status to publish July 25, 2024