ஞானகுரு :
இக்கரைக்கு அக்கரைப் பச்சை. தன் இலையில் விழுந்ததைவிட பக்கத்து இலை நண்பனுக்கு பெரிய லட்டு விழுந்திருக்கிறது என்று ஆதங்கப்படும் மனிதர்கள்தான் இங்கே அதிகம். கிடைத்ததை அனுபவிக்காமல் பறப்பதற்கு ஆசைப்பட வேண்டாம். ஒரு தெரு நாய் வாழ்க்கையை ஆராய்ந்து பாருங்கள். ஒரு வாய் உணவுக்காக நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. எனவே, உங்களுக்கு என்ன கிடைத்திருக்கிறதோ, அதை அனுபவியுங்கள். எந்த நேரமும் இந்த வாழ்க்கை முடிந்துவிடலாம். ஆகவே, எதிர்காலத்திற்காக கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்காமல் நிகழ்காலத்துக்காக வாழுங்கள்.
gyaanaguru.com Changed status to publish July 23, 2024