அடுத்த தேர்தலுக்கு ஸ்டாலின் ஸ்கெட்ச்

Image

எக்கச்சக்க குழப்பத்தில் எடப்பாடி பழனிசாமி

மக்களவைத் தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளையும் தட்டித் தூக்கிய ஸ்டாலின், 2026ம் ஆண்டு வரயிருக்கும் சட்டமன்றத் தேர்தலை ஜெயிப்பதற்கு இப்போதே ஒருங்கிணைப்புக் குழு அமைத்துவிட்டார். ஆனால், எதிரணியினர் எல்லோருமே இன்னமும் குழப்பத்திலும் நடுக்கத்திலும் இருக்கிறார்கள் என்பது தான் பரிதாபம்.

ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு கழகத்தில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளை கழகத் தலைவருக்கும் தலைமைக்கும் பரிந்துரைக்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படுகிறது. கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இந்த குழுவில் நியமிக்கப்படுகிறார்கள்’ என்று அறிவிப்பு செய்திருக்கிறார்.

தி.மு.க. இப்படி நாலுகால் பாய்ச்சலில் சென்றுகொண்டிருக்கும் நேரத்தில் அ.தி.முக.வில் அடுத்தகட்டமாக என்ன செய்வது என்று புரியாமல் விழிக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

ஒருங்கிணைப்புக் குழு மூலம் சிதறிக்கடக்கும் அனைத்துத் தலைவர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு குழுவினர் மீண்டும் மீண்டும் பேசி வருகிறார்கள். அதிமுகவை ஒன்றிணைக்க சென்ற மாதமே ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டு அதன் பணிகளை துவங்கி உள்ளது.

ஆனால், எடப்பாடி பழனிசாமி இதனை கொஞ்சமும் ரசிக்கவில்லை. பா.ம.க.வுடன் கூட்டு சேர்ந்தாலே கண்டிப்பாக ஆட்சியைக் கைப்பற்றிவிட முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். ஆனால், ராமதாஸோ இன்னமும் பா.ஜ.க. கட்டுப்பாட்டில் இருக்கிறார்.

இந்த நிலையில் சீமான் வாக்குவங்கி அதிகரித்துவருகிறது. இது தவிர விஜய்யும் அரசியல் களத்துக்குள் வருகிறார். இம்புட்டுப் பிரச்னைகளை வைத்துக்கொண்டு எப்படி தி.மு.க.வை ஜெயிக்கப் போகிறார் எடப்பாடி பழனிசாமி.

இந்த நிலையில் இன்னும் ஆறு மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் வரப்போகிறது, இதையும் எடப்பாடி பழனிசாமி புறக்கணித்துவிடுவாரா என்று நடுங்கிக் கிடக்கிறார்கள் அ.தி.மு.க. உண்மைத் தொண்டர்கள்.

Leave a Comment