நிலவேம்புக் கஷாயம் எதிர்ப்பாளர்களுக்கு சவால்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 81

டெங்கு நோய்க்கு மருந்தாகவும் தடுப்பு மருந்தாகவும் நிறைய பேர் நிலவேம்புக் கஷாயம், பப்பாளி இலைச்சாறு குடித்துவந்த நேரத்தில், ஒரு சிலர் மட்டும் நிலவேம்புக் கஷாயத்தின் நோய் தீர்க்கும் திறன் குறித்து அச்சம் எழுப்பினார்கள்.

இதற்கு பெருநகர சென்னை மேயராக இருந்த சைதை துரைசாமி, ‘’அலோபதி மருத்துவத்தில் டெங்கு நோய்க்கு மருந்தில்லை. எனவே டெங்கு  வைரஸ் தாக்கத்திற்கு  நிவாரணி  நில வேம்பு கஷாயம்  மற்றும் பப்பாளி இலைச் சாறு தவிர, வேறு மருந்து எதுவும் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  இந்த மருந்து எடுத்துக்கொள்வதால் யாருக்கும் எவ்வித பக்க விளைவும் இல்லை. 

எனவே பொது மக்கள் நில வேம்புக் கஷாயம்  மற்றும் பப்பாளி இலைச் சாற்றினை பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியம் காக்கப்படும்;  பொருளாதாரமும் சேமிக்கப்படும். இது குறித்து இன்னும் விரிவாக விவாதிக்க விரும்பினால், எந்த விவாதத்திற்கும் நான் தயார் ’’ என்று சவால் விடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டார். இதனையடுத்து மக்கள் எவ்வித அச்சமும் இன்றி நிலவேம்புக் கஷாயம் எடுத்துக்கொண்டார்கள்.

மேயராக சைதை துரைசாமி பதவிக்கு வந்த குறுகிய காலத்திலே, அதாவது 2012-ம் ஆண்டிலே நிலவேம்புக் கஷாயம் புழக்கத்திற்கு வந்துவிட்டது. இதையடுத்து டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மளமளவென குறைந்தது.

அதாவது 2011ம் ஆண்டு வரை, ஒவ்வோர் ஆண்டும் சென்னையில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவது வழக்கமாக இருந்துவந்தது. நிலவேம்புக் கஷாயம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு அதாவது 2012ம் ஆண்டு முதல் நோயாளிகள் பாதிப்பு மளமளவென குறையத் தொடங்கியது. 2015ம் ஆண்டு டெங்குவால் சென்னை மாநகரில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மொத்தமே 108 பேர்தான். 2015-ம் ஆண்டுதான் சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து, சென்னை மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது குறிப்பிடத்தக்கது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment