எல்லா இடங்களிலும் நிலவேம்புக் கஷாயம் விநியோகம்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 80

ஆங்கில மருத்துவம் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த நேரத்தில், சித்த மருத்துவத்திற்கு தமிழகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கச் செய்தவர் மேயர் சைதை துரைசாமி. டெங்கு நோய்க்கு நிலவேம்புக் கஷாயம் மற்றும் பப்பாளி இலை சாறு சிறந்த முறையில் பயனளிக்கின்றன என கிங் நோய்த்தடுப்பு மற்றும் ஆய்வு நிறுவனம் அளித்த ஆய்வு ரிப்போர்ட் அடிப்படையில் பிரபல நாளிதழ்களில்,  அரசு சுகாதாரத் துறை  மூலம் முழுப்பக்க விளம்பரம் வெளியிடப்பட்டது.

இந்த விளம்பரம் தமிழக மக்களுக்கு மிகப்பெரும் விழிப்புணர்வை உண்டாக்கியது. இதையடுத்து அரசு மருத்துவ மனைகள், மாநகராட்சி  மற்றும்  உள்ளாட்சி அமைப்புகள் நடத்திவரும் மருத்துவமனைகளில்   நில வேம்புக் கஷாயம்  மற்றும் பப்பாளி இலைச் சாறு வழங்குவதற்கு   அரசாணை பிறப்பிக்கப்பட்டது.  

அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி  அம்மா உணவகம், ரயில்வே ஸ்டேஷன், பஸ் நிலையம் போன்று மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் கஷாயம் இலவசமாக வழங்கப்பட்டன. ஒருசில இடங்களில் சித்த மருத்துவர்கள் முன்னிலையில், கஷாயம் காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

மக்களுக்கு ஏற்பட்ட விழிப்புணர்வை அடுத்து தனியார் மருத்துவமனைகளும் நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு வழங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின. இது பக்கவிளைவு இல்லாதது என்பதால் குடும்பத்தில் அனைவரும் ஆர்வமுடன் கஷாயம் குடிக்கத் தொடங்கினார்கள்.

நாட்டு மருந்துக் கடைகளில் நிலவேம்பு வாங்கி வீடுகளில் கஷாயம் போட்டுக் குடிக்கும் பழக்கமும் அதிகரித்தது. அதோடு, டெங்கு தவிர மற்ற நோய்களுக்கும் சித்த மருத்துவத்தைப் பயன்படுத்துவதற்கு மக்கள் ஆர்வமாக முன்வந்தார்கள்.

 – நாளை பார்க்கலாம்.

Leave a Comment