ஞானகுரு :
பிறருடன் ஒப்பிடும் நபருக்கே பொறாமை குணம் தோன்றுகிறது. எங்கோ ஒரு தேசத்தில், யாரோ ஒரு நபருக்கு ஆயிரம் கோடி ரூபாய் லாட்டரியில் கிடைத்தாலும் யாரும் பொறாமைப்படுவதில்லை. ஆனால், பக்கத்து வீட்டு நபருக்கு புரமோஷன் மூலம் ஆயிரம் ரூபாய் கூடுதலாக சம்பளம் வருகிறது என்றால் பொறாமை வந்துவிடுகிறது. பொதுவாக நமக்கு பிடித்தமான அல்லது நமக்குத் தெரிந்த நபரிடம் மட்டுமே பொறாமை தோன்றுகிறது என்பதால், நாளடைவில் இதுவே, உறவு சீர்கேட்டுக்கு வழி வகுத்துவிடும்.
உலகில் ஒவ்வொரு நபருக்கும் தனித்துவம் உண்டு. ஒவ்வொரு அழகுக்கும் மதிப்பு உண்டு. ஒவ்வொரு நபர் சம்பாதிக்கும் பணத்துக்கும் மரியாதை உண்டு. இதை அறியாமல், தன்னிடம் இல்லாத ஒன்று அடுத்தவரிடம் இருப்பதாக நினைப்பதே பொறாமையின் அடித்தளம்.
இதனை நெகடிவாக பார்க்காமல் பாசிடிவாக பார்த்தால் பொறாமையை வென்றுவிட முடியும். பக்கத்து வீட்டுக்காரருக்கு புரமோஷன் என்றதும் இவரும் கடுமையாக உழைத்தால் டபுள் புரமோஷன் வாங்கலாம். பறவை மட்டும் பறக்கிறதே என்று பொறாமைப்படாமல், ஏரோபிளேன் கண்டுபிடித்தது பாசிடிவ் திங்கிங்.