ரத்த அழுத்தத்துக்கு அருமருந்து
வெளிநாட்டினர் வாழைப்பழம் சாப்பிடுவதற்கு அதிக விருப்பமும் அக்கறையும் காட்டுகிறார்கள். ஆனால், அதிகம் விளைவதாலோ என்னவோ நம் நாட்டில் வாழைப்பழத்தை நிறைய பேர் மதிப்பதில்லை. இன்னும் சிலர் வாழை என்றால் கோழை என்ற எண்ணத்தில் புறக்கணிக்கிறார்கள்.
உண்மையில், வாழைப்பழம் சளி தருவதில்லை, முன்பே உடலில் தேங்கியிருக்கும் சளியை வெளியே கொண்டு வரும் வேலையைத்தான் வாழைப்பழம் செய்கிறது. ஒவ்வொரு வகை வாழைப்பழமும் ஒவ்வொரு வகையில் தனித்தன்மை கொண்டதாக இருக்கிறது.
வாழைப்பழத்தில் B6 மற்றும் B12 வைட்டமின்கள் நிரம்பியுள்ளன. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவும், உப்பு குறைந்த அளவும் இருப்பதால் அது உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இரும்புச்சத்து போதுமான அளவில் இருப்பதால் ரத்த சோகை இருப்பவர்களுக்கு வாழைப்பழம் சிறந்தது. மலச்சிக்கலைப் போக்குவதற்கு வாழைப்பழம் நல்ல மருந்தாகத் திகழ்கிறது.
வயிற்றில் அமிலம் சுரப்பதையும், அல்சர் எனப்படும் புண் ஏற்படுவதையும் பக்கவாதம் ஏற்படுவதையும் வாழைப்பழம் தடுக்கிறது. ஒரே வகையான வாழைப்பழம் சாப்பிடாமல் எல்லா வகை வாழைப் பழமும் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள்.