ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மா உணவகம்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 65

தமிழகத்தில் மேயர் சைதை துரைசாமி தொடங்கிய அம்மா உணவகத்திற்குக் கிடைத்த வெற்றி இந்தியா முழுக்க எதிரொலித்தது. உடனே கர்நாடகாவில் இந்திரா காந்தி உணவகம் என்ற பெயரில் ஆந்திராவில் அண்ணா கேண்டீன் என்றும் தொடங்கப்பட்டன. இதையடுத்து இந்தியா முழுக்க அம்மா உணவகம் கிளை விரித்தது.

மத்திய பிரதேசத்தில் மாமா உணவகம்

தமிழகத்தின் அம்மா உணவகத்தைப் பின்பற்றி மத்திய பிரதேச  முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ‘தீன் தயாள் தாலி’ என்ற பெயரில் மலிவு விலை உணவகம் தொடங்கினார்.  இத்திட்டத்தின் கீழ் 4 ரொட்டிகள், சிறிதளவு சாதம், பருப்பு, காய்கறி மற்றும் புலாவ் உணவு  5 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். நிறுவனர்களில் ஒருவரான தீன தயாள் உபாத்யாயாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் பெயரில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. அவரை மத்திய பிரதேச மக்கள் மாமா என்று அன்புடன் அழைப்பதால், இது மாமா உணவகமாக பிரபலமடைந்துள்ளது.

ராஜஸ்தானில் அன்னபூர்ணா ரசோயி

தமிழகத்தில் அம்மா உணவகத்தை பார்வையிட அதிகாரிகளை அனுப்பியிருந்தார் ராஜஸ்தான் முதல் அமைச்சர் வசுந்தரா ராஜே. அவர்கள் அரசுக்கு அளித்த அறிக்கையின் அடிப்படையில், அம்மா உணவகம் போலவே அன்னபூர்ணா ரசோயி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு காலை, இரவு உணவுகள் 5 ரூபாய்க்கும், மதிய உணவு 8 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது.

அதிக மக்கள் தொகை இல்லாத கிராமங்களில் மலிவுவிலை உணவகம் தொடங்குவது பொருளாதார ரீதியில் சிரமம் என்பதால், நாலைந்து கிராமங்களுக்கு ஒரு வேன் என்ற ரீதியில் நடமாடும் மலிவு விலை உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் உணவு வகை களான  பஜ்ரே கி ரோட்டி, மக்கி கி கிச்சடி, டால் பாட்டி கூர்மா, பாஜ்ரே கி கிச்சடி, பேசன் கட்டா போன்றவை அன்னபூர்ணா ரசோயி மெனுவில்  இடம் பெற்றுள்ளன.

உத்தரபிரதேசத்தில் அன்னபூர்ணா போஜ்னாலயா

அம்மா உணவகம் பாணியில் உத்தரபிரதேசத்தில், அன்னபூர்ணா போஜ்னாலயா என்ற திட்டத்தை உ.பி. முதல்வர்  யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.  இங்கு காலை  உணவு 3 ரூபாய்க்கும்,  மதியம்  மற்றும்  இரவு உணவு  5 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது. முதல்கட்டமாக லக்னோ, கான்பூர், காசியாபாத், கோரக்பூர் ஆகிய இடங்களில் தொடங்கப்பட்டுள்ள இந்த உணவகங்களின் வரவேற்பைப் பொறுத்து, இந்த ஆண்டு மேலும் 200 உணவகம் திறக்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

  • நாளை பார்க்கலாம்

Leave a Comment

Image Not Found

கட்டுரை பகுதிகள்