ஜாலியான குட்டிக் கதைகள்
இன்னொரு வாய்ப்பு இருக்குப்பா…
ஒரு பெரிய தொழிலதிபரின் மனைவி இறந்து விட்டாள்.அவளது ஈம சடங்குகள் ஒரு பெரிய பொது நிகழ்ச்சி போல நடந்து கொண்டிருந்தது. நகரிலுள்ள பெரிய மனிதர்களும் மற்றவர்களும் வந்து துக்கம் கொண்டாடினர்.
அவர்களிடையே ஒரு புதிய மனிதன் மற்றவர்களை விட கவலை கொண்டவனாக காணப்பட்டான்.சடங்குகள் முடியுமுன் தேம்பி அழ ஆரம்பித்து விட்டான்.
மனைவியை இழந்தவர் கேட்டார்.
தேம்பி தேம்பி அழும் அந்த புதியவன் யார்?
பக்கத்தில் நின்ற ஒருவர் சொன்னார்:
தெரியாதா உங்களுக்கு? இறந்து போன உங்கள் மனைவியின் காதலன் அவன்.
மனைவியை இழந்தவர் அவனிடம் சென்றார்.அவனது தோள்களை தட்டி கொடுத்தார். பிறகு கூறினார்.
உற்சாகமாக இரு.ஒருவேளை நான் மறுமணம் செய்து கொள்ள கூடும்.
இலவச ஆலோசனை
தன்னுடைய இளமை காலம் தொட்டு அறிமுகமான தன் பழைய நண்பனை ஒரு ஞானி சந்தித்தார். தன் நண்பன் இப்போது ஞானி என்பதை அறியாத அந்த பழைய நண்பன் சாதாரணமாக பேச ஆரம்பித்தான். என்னப்பா என்ன சமாசாரம் எப்படி இருக்கிறாய் என்று மிகவும் சாதாரணமாக கேட்டான்.
அதற்கு அந்த ஞானி நல்லா இருக்கிறேன்.நீ எப்படி இருக்கிறாய் என்று பதிலுக்கு கேட்டார்.
அதற்கு அவன் பரவாயில்லை.ஆனால் வாழ்க்கையில் ஒன்றை மட்டும் நன்றாக புரிந்து கொண்டுவிட்டேன். அதாவது நாம் கஷ்டபட்டுதான் ஒன்றை அடைய முடியும். ஒன்றை அடையவில்லை என்றால் அதற்காக நீ போதுமான அளவு உழைக்கவில்லை என்றுதான் அர்த்தம் என்றான்.
அன்றிலிருந்து அந்த ஞானி யாருக்காவது அறிவுரை கூறினால், கடைசியில் தன் பழைய நண்பனின் எளிமையான வாசகங்களை அனுபவ ஞானத்தை கூற தவறுவதே இல்லை.
ஒன்ஸ் மோர் ப்ளீஸ்
ஒரு வியாபாரி பகல் உணவுக்காக ஒரு விடுதியை நோக்கி சென்றான்.எதிரே வந்த ஒருவன் அவரை நிறுத்தினான்.
என்னை உங்களுக்கு நினைவிருக்குமா என்று தெரியவில்லை. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் இந்த நகரத்திற்கு நான் வந்தேன்.அப்போது உங்களிடம் கொஞ்சம் பணம் கேட்டேன். நீங்கள் இருபது டாலர் கொடுத்து உதவினீர்கள்.
அப்பொழுது நீங்கள் ஒரு மனிதனை வெற்றி பாதையில் செல்ல இது வழிவகுக்கட்டும் என்று வாழ்த்தி கொடுத்தீர்கள் என்று சொன்னான்.
அந்த வியாபாரி சிறிது யோசித்து விட்டு, ‘ஆமாம், எனக்கு ஞாபகம் வந்து விட்டது. அப்புறம் சொல்லுங்கள்’ என்று ஆவலுடன் கேட்டான்.
அதற்கு அவன், ’இப்பொழுதும் அதை போல ஒரு சந்தர்ப்பம் எனக்கு கொடுக்க விரும்புகிறீர்களா?” என்றான்.