பந்தி இலைக்கும் இலக்கணம்

தமிழர் பண்பாடு மணக்குதே

தமிழ் மொழிக்கு மட்டுமல்ல, நாம் சாப்பிடும் இலைக்கும் இலக்கணம் வகுத்தவர் தமிழர்கள். ஆம், வாழை இலை போட்டு சாப்பிடுவதில்தான் எத்தனை துல்லிய தகவல்கள் என்று தெரிந்துகொள்லுங்கள்.

பரிமாறும்போது இலையை எப்படிப் போடுவது..? இலையின் நுனி இடது பக்கமாக வர வேண்டுமா..? வலது பக்கமா..?”

இலையின் நுனி , சாப்பிட அமர்ந்திருப்பவருக்கு இடது கை பக்கமாக வருகிற மாதிரி போட வேண்டும்.

ஏன்..?

நாம் சாப்பிடும்போது , வலது கையால் பிசைந்து சாப்பிடுவதால் , இலையின் வலது பக்கம் அதிக இடம் தேவை..!

சரி …உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம் இலையின் குறுகலான இடது பக்கத்தில் வைக்கிறோமே .. அது ஏன்..?

உப்பு, ஊறுகாய், இனிப்பு .. இதையெல்லாம் ஓவராக சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது . கொஞ்சமாகத்தான் சாப்பிட வேண்டும். அதனால்தான் இலையின் குறுகலான பாகத்தில் இட ஒதுக்கீடு. சாதம், காய் கறிகள் இவற்றையெல்லாம் நிறைய சாப்பிடலாம் . அதனால் அவற்றை இலையின் அகலமான வலது பக்கத்தில் பரிமாற வேண்டும்.

சரி .. இலையில் முதலில் வைக்கப்படும் இனிப்பை , பலர் கடைசியாக சாப்பிடுகிறார்களே, இது சரிதானா ..?

இல்லை..!

இலையில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. நாம் இனிப்பை எடுத்து வாயில் வைத்த அடுத்த நொடியில், அந்த இனிப்பு , உடனடியாக உமிழ் நீருடன் கரைந்து, ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று , வயிற்றில் ஜீரண சக்திக்கு தேவையான அமிலங்களை சுரக்க செய்ய உத்தரவிடுகிறது. அதனால்தான் ஜீரணம் எளிதாக நடை பெறுகிறது.

அடேங்கப்பா, தமிழன்னா சும்மாவா..?

Leave a Comment