அஞ்சலி பிர்லா காட்டும் சூப்பர் வழி
சரியாக படிப்பு வராத காரணத்தால் மாடலிங் துறையில் ஈடுபட்டுவந்தவர் சபாநாயகர் ஓம் பிர்லாவின் மகள் அஞ்சலி பிர்லா. இவருக்கு திடீர் ஞானோதயம் வந்து ஐஏஎஸ் தேர்வெழுதி முதல் அட்டெம்ப்ட்டில் ஐ.ஏ.எஸ். ஆகியுள்ளார். இவரது வாழ்க்கை எல்லோருக்கும் பாடம் என்று நாடு முழுவதும் கிண்டல் கொடி கட்டிப் பறக்கிறது.
நீட் தேர்வில் இதுவரை எப்படியெல்லாம் ஊழல் நடந்தது, அநியாயம் நடந்தது என்பது இப்போது தான் அம்பலமாகியிருக்கிறது. அஞ்சலி பிர்லாவை தேர்வு செய்தது ஆர்.எஸ்.எஸ். என்று புகார் கூறப்பட்டு வருகிறது.
சமீபத்தில் பா.ஜ.க. ஆட்சியில் ஏறியதும் சபாநாயகருக்குத் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது தேசிய ஜனநாயக் கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்க்கட்சிகள் சார்பில் மலிக்கரா எம்.பி. கே.சுரேஷும் போட்டியிட்டனர். இதற்கு தேர்தல் நடத்தாமல் குரல் வாக்கெடுப்பு மூலமே ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பா.ஜ.க. கூட்டணியின் எண்ணிக்கை அதிகம் என்பதால், இதை இண்டியா கூட்டணியும் பிரச்னை ஆக்கவில்லை.
இந்த நேரத்தில் ஓம் பிர்லாவின் இண்டாவது மகள் அஞ்சலி பிர்லா பேசுபொருளாகியிருக்கிறார். சரியாக படிப்பு வராத அஞ்சலி திடீரென மனம் மாறி 2019ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வு எழுதி, முதல் முயற்சியிலே வெற்றியும் அடைந்திருக்கிறார்.
பா.ஜ.க.வை கடந்த தேர்தல்களில் வறுத்தெடுத்த துருவ் ரத்தோர், இப்போது அஞ்சலியின் வெற்றியை கேள்விக்குறியாக்கி வீடியோ போட்டிருக்கிறார். உண்மையில் அவர் தான் பரீட்சை எழுதினாரா, அவர் எத்தனை மதிப்பெண் வாங்கினார், எப்படி வெற்றி பெற்றார் என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்.
ஓம் பிர்லா இதை எல்லாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்..? எப்போதும் போல் கேள்விகளை எல்லாம் வெளியே தூக்கிப் போட்டுவிடுவாரோ..?