சிங்கப்பூரில் அம்மா உணவகத்தின் பெருமை

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 58

பெருநகர சென்னை மேயராக இருந்த சைதை துரைசாமியின் சிந்தனையின் உதித்த அம்மா உணவகத்திற்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் புகழ் கிடைத்தது. இந்த நேரத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச மேயர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பு சைதை துரைசாமிக்குக் கிடைத்தது.

சிங்கப்பூர் மாநாட்டில் 168 நாடுகளில் இருந்து வந்த மாநகர மேயர்கள் கலந்துகொண்டனர். அந்த மாநாட்டில் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் அம்மா உணவகம் பற்றி விளக்கமாகப் பேசினார் சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி.

‘’அரை டாலருக்கும் குறைவான பணத்தின் மூலம் ஒரு குடும்பம் பசி இல்லாமல் நாள் முழுவதும் நிம்மதியாக வாழும் வகையில் அம்மா உணவகம் என்ற திட்டம் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. உலகம் முழுவதும் இந்தத் திட்டத்தை அமல்படுத்தினால், பசியினால் எந்த ஒரு நாட்டிலும் யாரும் துன்பம் அடைய வேண்டிய அவசியம் நிகழாது. இதற்கான செயல் திட்டத்தை வழங்குவதற்குத் தயாராக இருக்கிறோம்…’’ என்று பேசி உலகத் தலைவர்களை ஆச்சர்யப்படுத்தினார் சைதை துரைசாமி.

விழாவில் சைதை துரைசாமி பேசி முடித்ததும், அவரை பல்வேறு நாட்டின் மேயரும் சுற்றிவந்து, அந்த திட்டம் பற்றி பல்வேறு சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெற்றார்கள். நிறைய குறிப்புகள் எடுத்துக்கொண்டார்கள். உலக நாட்டுத் தலைவர்கள் அத்தனை பேரும் வியந்து பார்க்கும் வகையில் அம்மா உணவகத் திட்டம் இருந்தது. எப்படி இப்படி ஒரு சிந்தனை வந்தது, எப்படி இதனை சாத்தியப்படுத்தினீர்கள் என்று ஆச்சர்யப்பட்டதுடன் நில்லாமல் மனதாரப் பாராட்டி அருகில் நின்று படம் எடுத்துக்கொண்டார்கள். தங்கள் நாட்டிலும் இதனை செயல்படுத்துவதற்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள்.

இந்த மாநாடு முடித்து சென்னைக்கு வந்த மேயர் துரைசாமிக்கு முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து அழைப்பு வந்தது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment