கவித்துவம்
அக்காக்கள் தற்கொலை செய்யும்போது
தங்கைகளின் சுதந்திரத்தைப்
பறித்துவிடுகிறார்கள்
அக்காக்கு சேர்ந்திருக்க வேண்டிய அன்பும்,
நியாயமாகப் பெற்றிருக்க வேண்டிய கவனிப்பும்,
கரிசனமும், சலுகையும்
திடும்மென மொத்தமாக
இவள் தலையில்
அரிசிக்கல் அட்சதையாக விழுந்துவிடுகிறது.
இருந்த ஒன்றை இழந்தபிறகு
மிச்சம் இருக்கும் ஒன்றை
அதிக இறுக்கமாக பற்றிக்கொள்ள நேரும்.
இறுக்கத்தை சற்று அசவுகர்யத்துடன்
பொறுத்துக்கொள்ளும் தங்கை ஒருத்தி
அக்காவை வசைபாடிக் கொண்டிருந்தாள்
‘ஏன் நாய செத்துத்தொலைஞ்ச’
- யாத்திரி