பொதுமேடையில் எச்சரிக்கை
ஆந்திராவில் நடைபெற்ற சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் மேடையில் இருந்தனர். அந்த விழா மேடைக்கு வந்த முன்னாள் கவர்னர் தமிழிசை செளந்தரராஜனை அமித் ஷா பொதுவெளியில் எச்சரிக்கை செய்தது பெரும் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகத்தில் அண்ணாமலையை எதிர்த்து பா.ஜ.க.வின் சீனியர்கள் யாரும் வாயைத் திறப்பதே இல்லை. இந்த நிலையில் முதன்முதலாக அண்ணாமலையின் வார் ரூம் ஆட்களுக்கு பொதுவெளியில் எச்சரிக்கை செய்தார் தமிழிசை செளந்தர்ராஜன்.
அதோடு, அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருந்தால் எளிதில் வெற்றி பெற்றிருக்கலாம் என்று கூறுவதை அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்தார். இதையும் தமிழிசை செளந்தர்ராஜன் கண்டித்தார். மேலும் அண்ணாமலைக்கு எதிராக டெல்லியில் ஆதரவாளர்களுடன் மீட்டிங் போட்டார்.
அண்ணாமலைக்கு அமைச்சர் பதவி கை நழுவிப் போனதை பா.ஜக.வின் சீனியர் தலைவர்கள் பலர் கொண்டாடியிருக்கிறார்கள். உட்கட்சி பூசல் அதிகரிப்பதைக் கண்டு அமித் ஷா கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட தமிழிசை செளந்தரராஜனிடம் கையைக் காட்டி எச்சரிக்கை கொடுத்திருக்கிறார். அண்ணாமலைக்கு எதிராக எதுவும் பேசக்கூடாது என்றே எச்சரிக்கை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தமிழிசை ஆதரவாளர்களை கடுமையாக பாதித்திருக்கிறது. கட்சி மாறுவதாக சொல்லப்படும் விவகாரம் உண்மையாகிவிடும் என்றே தெரிவிக்கிறார்கள். அதேநேரம், அமித் ஷா கண்டிக்கவே இல்லை. இருந்து சாப்பிட்டுத்தான் போக வேண்டும் என்று தான் கோபமாகத் தெரிவித்தார் என்பது போன்று தமிழிசை செளந்தரராஜன் கருத்து சொல்லவே அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.