• Home
  • அரசியல்
  • ஜாதி அரசியலுக்கு தமிழர்கள் கெட் அவுட்

ஜாதி அரசியலுக்கு தமிழர்கள் கெட் அவுட்

Image

பா.ஜ.க. ரூட்டுக்கு வேட்டு

இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எல்லாம் மத அரசியல் செய்து ஓட்டு வாங்குவதே பா.ஜ.க.வின் பாலிசி. அது, தமிழகத்தில் எடுபடவில்லை என்பதால் இங்கு ஜாதி அரசியலைக் கையில் எடுத்தார்கள்.

ஜாதி தலைவர்களை தங்கள் கைக்குள் வைத்துக்கொண்டால் ஓட்டுகள் சேர்ந்துவிடும் என்பதே அவர்கள் கணக்கு. அதனாலே பாட்டாளி மக்கள் கட்சிக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுத்து அழைத்தார்கள். வன்னியர்கள் வாக்கை பா.ஜ.க.வும் நம்பியது.

வன்னியர் வாக்குகள் மீது அதீத நம்பிக்கை வைத்தே செளமியா அன்புமணியும் களத்தில் இறங்கினார். அதேபோல் முக்குலத்தோர் வாக்குகளில் பெரும்பான்மை தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்திடமும் இருக்கிறது என்றே நம்பினார்கள். அதனாலே அ.தி.மு.க.வுடன் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு இருந்தபோதும் தட்டிக் கழித்து அவர்கள் இருவரை மட்டும் களத்தில் இறக்கினார்கள்.

அதே தேவர் ஓட்டு மீது நம்பிக்கை வைத்தே நயினார் நாகேந்திரனும் களத்தில் இறங்கினார். சட்டமன்றத்தைப் போன்று தங்கள் ஜாதி ஓட்டு மட்டுமே போதும் என்று நினைத்தார்.

பாரிவேந்தரும், ஏசி சண்முகமும் அவரவர் ஏரியாவில் தங்கள் சொந்த வாக்கு வங்கி மற்றும் கோடிகளில் பணத்தை நம்பி களத்தில் இறங்கினார்கள். ஜாதி வாக்கை நம்பி வழக்கமாக ஏமாந்து போகும் கிருஷ்ணசாமியும் இந்த முறை அந்த வாக்குகளை நம்பினார்.

பா.ஜ.க. கூட்டணியில் சேர்வதாக இருந்த பிரேமலதா கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வில் இணைந்ததற்குக் காரணம், அவர் கேட்ட தொகுதிகளை கொடுப்பதற்கு பா.ஜ.க. தயாராக இல்லை என்பது தான். எனவே, அ.தி.மு.க.வில் விஜயகாந்த் சொந்த ஊர், சொந்த ஜாதியை நம்பி களத்தில் இறக்கினார். ஜான் பாண்டியனும் ஜாதி ஓட்டை நம்பியே தேர்தலில் குதித்தார்.

தமிழகத்தைப் பொறுத்த வரை ஜாதி, மதம் ஆகியவற்றை விட அரசியலே பெரிது என்பதை மக்கள் மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.

Leave a Comment