• Home
  • அரசியல்
  • செளமியா தோல்விக்குக் காரணம் ஜாதிப் பற்று.

செளமியா தோல்விக்குக் காரணம் ஜாதிப் பற்று.

Image

ஜாதி பார்த்துத் தான் ஓட்டு போடுறாங்க சார்

இந்த காலத்துல யாரு ஜாதி பார்த்து ஓட்டுப் போடுறாங்க என்று இளசுகள் சிலர் கேட்டாலும் 50 விழுக்காடு மக்கள் ஜாதி பார்த்தே ஓட்டுப் போடுகிறார்கள் என்பதற்கு உதாரணம் செளமியாவுக்கு விழுந்த வாக்குகள்.

தர்மபுரி தொகுதியில் நம்ம ஆளு செளமியாவை ஜெயிக்க வைத்தே ஆகவேண்டும் என்று பா.மக.வினர் திண்ணைப் பிரசாரம் போன்று ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டினார்கள். அதனால் வன்னியர்கள் அப்படியே ஓட்டு போட்டார்கள். அதனால் தான் வன்னியர்கள் நிறைந்த சட்டமன்றத் தொகுதிகளில் எல்லாம் செளமியா முன்னிலை வகித்தார்கள்.

இந்த இந்த வாக்கு எண்ணிக்கையைப் பார்த்தாலே உண்மை தெரியும். தர்மபுரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ,பாலக்கோடு தொகுயில் மணி திமுக;. 71,344 சௌமியா பாமக: 60,878 கூடுதல்:. 10,466. அடுத்ததாக ,பென்னாகரம் தொகுதியில் மணி திமுக;. 64,581 சௌமியா பாமக: 76,166 குறைவு : 11,585

தர்மபுரி சட்டமன்றத் தொகுதியில் மணி திமுக;. 66,002 சௌமியா பாமக: 79,527 குறைவு:. 13,525. அடுத்த பாப்பிரெட்டிப்பட்டி மணி திமுக;. 73,700 சௌமியா பாமக: 82,434 குறைவு:. 8,734

,ஆரூர்(தனி) தொகுதியில் மட்டுமே மாற்றம் நிகழ்ந்தது. இது தனி தொகுதி. இங்கு மாற்று ஜாதியினரே அதிகம் அதனால் இங்கு மணி திமுக;. 85,850 சௌமியா பாமக: 46,175 கூடுதல்:. 39,675 பெற்றார். அதேபோல் மேட்டூர் தொகுதியிலும் மணி கொஞ்சம் கூடுதல் பெற்றார்.

பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி காலை வாரிவிட பாலக்கோடு, ஆரூர், மேட்டூர் பகுதி மக்கள் திமுகவை காப்பாற்றி இருக்கிறார்கள். அதிலும் அரூர் தனித்தொகுதி மக்கள் திமுகவை தங்கள் தோள்களில் சுமந்து வெற்றியடைய செய்திருக்கிறார்கள்.

இப்போ புரியுதா, ஏன் ஜாதி பார்த்து வேட்பாளர் போடுறாங்கன்னு.

Leave a Comment

Image Not Found

கட்டுரை பகுதிகள்