ஞானகுரு நாட்டியாலயாவின் சலங்கை ஒலி

Image

மதுரையில் வகுப்புகள் ஆரம்பம்

கலைகளின் சங்கமமாகத் திகழும் சென்னையின் மயிலாப்பூரில் திரும்பிய பக்கமெல்லாம் இசையும் சலங்கையும் ஒலிக்கும். அந்த சலங்கை ஒலியில் வசியமாகி பள்ளிக்குள் நுழைந்த அதே வயதில் காலில் சலங்கை கட்டியவர் குரு நிலா.

தஞ்சை பரதநாட்டிய ஸ்டைலில் பிரபலமான ஹேம்நாத் ரகுவின் கிளாசிக்கல் டான்ஸ் பள்ளியில் நுழைந்து முன்வரிசை மாணவியாகத் திகழ்ந்தார். மென்மேலும் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் பாரதிய வித்யா பவனில் நடனப்பயிற்சி கொடுத்துவந்த லட்சுமியின் வழிகாட்டுதலில் நிலாவின் நடனம் மேலும் மெருகேறியது.

இந்த நேரத்தில் சென்னை கலாஷேத்ரா மாணவிகளின் நடன லாவகத்தில் தன் மனதை பறிகொடுத்தார். பரதக்கலையின் மேதமை ருக்மணி தேவி அருண்டேல் உருவாக்கிய பாலே ஸ்டைல் பரதநாட்டியக் கலையை சூரியநாராயண மூர்த்தி, திவ்யா ஹரி ஆகியோரிடம் முறைப்படி கற்றுக்கொண்டார்.

சென்னை, டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டம் படித்து முடித்துவிட்டு கடுமையான பணிச்சூழலிலும் பரதநாட்டியக் கலையின் மூலம் மகிழ்ச்சியும் புத்துணர்வும் அடைந்தார் நிலா. தனக்குக் கிடைக்கும் உற்சாகம், தனித்திறன், கவனிப்புத்தன்மை போன்றவைகளை மற்றவர்களுக்கும் பகிர்ந்துகொள்ளும் வகையில், பல்வேறு கலைஞர்களிடம் கற்றுக்கொண்ட பரதநாட்டியத்தை முறைப்படுத்தி தனக்கென ஒரு தனி பாணியில் ஞானகுரு நாட்டியாலயாவை உருவாக்கி இருக்கிறார்.

ஞானகுரு நாட்டியாலயா மூலம் பல பள்ளி, கல்லூரி மாணவிகளை கலாச்சார விழாக்களில் பங்கேற்க வைத்திருக்கிறார். கச்சிதமான உடலமைப்பு, ஆரோக்கியம்,  ஒருங்கிணைந்த மனம், அதீத நம்பிக்கை, ஒருமுகப்படுத்தும் தன்மை ஆகியவை நாட்டியம் மூலம் ஒவ்வொரு நபருக்கும் கிடைக்க வேண்டும் என்பதையே ஞானகுரு நாட்டியாலயாவின் நோக்கமாகக் கொண்டிருக்கிறார்.

மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணிச்சூழல் மாறியதையடுத்து, தன்னுடைய ஞானகுரு நாட்டியாலயா பயிற்சி வகுப்புகளை மதுரையில் தொடங்கியிருக்கிறார். இவருக்கு கலாஷேத்ராவின் தலைமை பேராசிரியர்கள் ஜுலோசனா, திவ்யா ஹரி ஆகியோரின் அன்பும் ஆசியும் இருப்பதை பெருமையாகக் கருதுகிறார்.

ஞானகுரு நாட்டியாலயா மூலம் கற்பவர் மட்டுமின்றி பார்ப்பவர்களும் ஆனந்தம் அடைய வேண்டும் என்பதே குரு நிலாவின் நாட்டிய பாணி. அவரது புதுமையான நாட்டிய பாணியில் பங்கேற்று மகிழ்ச்சியும் தனித்தன்மையும் பெற்றுக்கொள்ளுங்கள்.

வகுப்புகள் : சனி மற்றும் ஞாயிறு

இடம் : எஃப்.எஃப்.4, த பிளஸ்டு அபோடு அபார்ட்மெண்ட், 3, ஜவஹர் ரோடு, சொக்கிகுளம், மதுரை – 625002.

தொடர்புக்கு : 72997 53999, 9840903586

Image Not Found

கட்டுரை பகுதிகள்