சட்டென குறையுது தங்கம் விலை…

என்ன செய்வது புத்திசாலித்தனம்?

மளமளவென மேலே போய்க்கொண்டிருந்த தங்கம் விலை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிவருகிறது. ஜனவரி 29 அன்று 1,34,400 ரூபாயாக இருந்த தங்கம் இப்போது 1 லட்சம் ரூபாய்க்குக் கீழே இறங்கிவிட்டது.

தெளிவாகச் சொல்வது என்றால் இன்றைய விலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் 99,760 ரூபாய். ஜனவரியில் இருந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை, கடந்த மாதத்தில் இருந்தே கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. அதுவும் குறிப்பாக கடந்த சில தினங்களாகவே விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.

நவம்பர் 11 அன்று 1,04,120 ரூபாயாக இருந்த சவரன் விலை, இன்று 99,760 ஆக சரிந்து கிட்டத்தட்ட 4,360 ரூபாய் குறைந்திருக்கிறது. உலகளவில் எண்ணெய் விலை உயர்வதும், பணவீக்கம் காரணமாக மக்களின் வாங்கும் திறன் குறைவதும் காரணம் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.

தங்கத்தின் விலை 90 ஆயிரத்தைத் தொடுவதற்கு  வாய்ப்பு உண்டு என்கிறார்கள். எனவே,இந்த நேரத்தில் தங்கம் வாங்குவதாக முடிவெடுத்தால் நிச்சயம் நல்ல முடிவாக இருக்கும். அணிவதற்கான நகை என்றாலும் சேமிப்பு என்றாலும் தங்கத்தில் முதலீடு செய்யலாம். அதேநேரம், கடன் வாங்கி தங்கம் வாங்குவதற்கு முயற்சி செய்யவேண்டாம்.

பழைய நகைகளை புதிதாக மாற்றுவதற்கும் இது நல்ல தருணம். சரியான வாய்ப்பு கிடைக்கும்போது பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதேநேரம், கொஞ்சமாக மட்டும் முதலீடு செய்யுங்கள். ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் வாங்கி பணத்தை காலி செய்துவிடாதீர்கள். அடுத்தடுத்து நடப்பவை குறித்து தெளிவ்வாக ஆயுவு செய்த பிறகே மொத்த முதலீடு செய்ய வேண்டும்.

பண ஆலோசனையில் பிறர் சொல்வதைக் கேட்காமல் மார்க்கெட்டைப் பாருங்கள். உங்கள் மனதைக் கேட்டு முடிவெடுங்கள்.

Leave a Comment