ஞானகுரு பதில்
கேள்வி : ஏஐ தொழில்நுட்பம் காரணமாக வேலை போய்விடும் என்று அச்சமாக உள்ளது. என்ன செய்வது..?
- எஸ்.பி.ராஜாராமன், சென்னை.
ஞானகுரு :
டெக்னாலஜி மாற்றங்களை யாராலும் தடுக்க முடியாது. எனவே புதிய தொழில்நுட்பத்தினால் வேலை போய்விடும் என்று அஞ்சுவதை விட, ஏஐ தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். இது, உங்கள் தகுதியை அதிகரித்துவிடும்.
அதேநேரம், வேலை பறிபோகும் சூழல் வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருங்கள். அதற்குள் குறைந்தது ஆறு மாதச் செலவுக்குத் தேவையான பணத்தை எமர்மெஜ்சி ஃப்ண்ட் என சேமித்து வையுங்கள்.
உங்கள் அனுபவத்தை வைத்து ஒரு சைடு பிசினஸ் செய்யத் தொடங்குங்கள். குறைந்த லாபம் என்றாலும் அதை தொடர்ந்து செய்யுங்கள். 12 மணி நேரம் உழைப்பதற்கு தயாராக இருப்பதை உங்கள் ரெஷ்யூமில் தெரிவியுங்கள். நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும் என்று நம்புங்கள், கிடைத்துவிடும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
