ஞானகுரு பதில்
கேள்வி : மனிதர்கள் எந்த நேரத்தில் எப்படி நடந்துகொள்வார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லையே.. ஏன்?
- பி.ஜேம்ஸ் ராஜன், தர்மபுரி.
ஞானகுரு :
மனிதர்களின் நடவடிக்கைகளை மேலோட்டமாகப் பார்த்தால் வித்தியாசமாகத் தெரியும். கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி செயல்படுவதைப் பார்க்க முடியும். இந்த சைக்காலஜி டிரிக்ஸ் கிட்டத்தட்ட அனைத்து மனிதர்களுக்கும் பொருத்தமானதுதான்.
பொய் சொல்பவர்கள் கண்களைப் பார்த்து பேச மாட்டார்கள். கவனத்தை ஈர்க்க நினைத்தால் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். கூட்டத்தில் பேசாமல் அமைதியாக இருப்பவருக்கு எல்லாமே தெரியும் என்று நினைப்பார்கள். கால்களை ஒருவர் எப்படி வைத்திருக்கிறார் என்பதிலிருந்தே அவர் ஆர்வம் காட்டுகிறாரா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள முடியும். கோபப்படும் நபர் முன்பு அலட்சியமாக சிரிப்பது அவரை பயமுறுத்திவிடும்.
எந்த ஒரு விஷயத்திலும் மனிதர்களுக்கு 10 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து ஆர்வம் இருப்பதில்லை. இதுபோன்ற சைக்காலஜிகளை கற்றுக்கொள்ளுங்கள். மனிதர்களின் நகர்வுகளை எளிதாக புரிந்துகொள்ள முடியும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
