ஞானகுரு பதில்
கேள்வி : இந்த காலத்தில் பிஞ்சிலே பழுத்துவிடுகிறார்கள், சின்ன வயதிலே கெட்டுப் போகிறார்களே…?
- ஏ.எஸ்.இராஜேந்திரன், வெள்ளூர்.
ஞானகுரு :
சின்ன வயதில் கெட்டுவிட்டார்கள் என்று ஒருவர் சொல்கிறார் என்றால், அவர் முதுமைக்கு வந்துவிட்டார் என்று அர்த்தம். ஏனென்றால், நாகரிகம் வளர்ந்த காலத்திலிருந்து மனிதர்கள் இப்படித் தான் அடுத்த தலைமுறையை விமர்சனம் செய்துகொண்டே இருக்கிறார்கள்.
உங்களுக்கு முந்தைய காலங்களிலும் அடுத்த தலைமுறையைப் பார்த்து முதல் தலைமுறை இப்படித்தான் சொல்லிக்கொண்டு இருந்தது, இருக்கும்.
எல்லா காலங்களிலும் இளைய சமுதாயத்தினரின் வளர்ச்சியும் முன்னேற்றமும் வேறு வகையாகவே இருக்கும். எனவே அவர்களை வேடிக்கை மட்டும் பாருங்கள். விமர்சனம் செய்து பூமர் அங்கிள் என்ற கேலிக்கு ஆளாகாதீர்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
