கணவருக்கு கிட்னி கொடுக்க வேண்டுமா?

ஞானகுரு பதில்

கேள்வி ; என் கணவருக்கு கிட்னி கெட்டுவிட்டது, அதனால் என் கிட்னியை தானம் செய்யச் சொல்கிறார்கள். அப்படி கொடுக்கலாமா..?

  • எஸ்.தேவிகா, சென்னை.

ஞானகுரு :

யாரிடமும் ஆலோசனை கேட்காமல் கிட்னி கொடுப்பதற்கு நீங்கள் விருப்பம் தெரிவித்திருந்தால் அது உங்களுடைய தெளிவான முடிவு என்று சொல்லலாம்.

கிட்னி கொடுப்பதா, வேண்டாமா என்ற குழப்பம் வந்துவிட்டாலே, உங்களுக்கு முழு விருப்பமில்லை என்பதே அர்த்தம். உங்கள் கணவருக்கு கிட்னி கெட்டுப் போனதற்கு நீங்கள் காரணம் இல்லை என்பதால் அவருக்கு தானம் தரவேண்டிய அவசியம் இல்லை.எனவே ஊர் என்ன சொல்லும், பிறர் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படாமல், ’கிட்னி கொடுக்க விருப்பமில்லை’ என்று உறுதியுடன் சொல்லிவிடுங்கள்.

கணவர் மீது அன்பு, பாசம் இருப்பதை கிட்னி கொடுத்து நிரூபிக்க வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை. உங்கள் கணவருக்கு கிட்னி தானம் கேட்டு பதிவு செய்யுங்கள். கிட்னி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன் காத்திருங்கள். எது நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment