கல்யாணப் பெண்ணிடம் நோட் திஸ் பாயின்ட்

ஆண்களுக்கு எச்சரிக்கை

திருமணத்திற்குப் பெண் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. எனவே, பெண் கிடைத்தால் போதும் என்று திருமணம் செய்துகொள்கிறார்கள். அதன்பிறகு மனைவியின் குணத்தை ஏற்கவும் முடியாமல், விலகவும் முடியாமல் ஆண்கள் கஷ்டப்படுகிறார்கள்.

எனவே, திருமணத்தில் நுழைவதற்கு முன்பு பெண்ணிடம் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயங்களை அறிந்துகொள்ளுங்கள்.

  • வீட்டு சாப்பாட்டை விட ஹோட்டல் உணவை விரும்பும் பெண் என்றால் ஆரோக்கியத்திற்கு ஆபத்து.
  • சேமிப்பு இல்லாத பெண்ணின் செலவைக் கட்டுப்படுத்த முடியாது. இது பர்ஸுக்கு ஆபத்து.  
  • தாய், தந்தையரை மதிக்காத பெண் கணவரையும் மதிக்கவே மாட்டார். இது, ஆளுமைக்கு ஆபத்து.
  • மாற்றுக் கருத்துக்கு சத்தமாகப் பேசி எதிர்ப்பு தெரிவிப்பவர் பிறரை புரிந்துகொள்ள முயற்சிக்க மாட்டார். இவரால் நிம்மதிக்கு ஆபத்து.
  • பகல் நேரத்தில் சோம்பேறித்தனமாகத் தூங்குபவருக்கு எந்த லட்சியமும் இருக்காது. இவரால் முன்னேற்றத்துக்கு ஆபத்து.

எனவே, திருமணத்திற்கு முன்பு பெண்ணிடம் இப்படிப்பட்ட குறைகள் இருந்தால், கண்டுபிடித்து அவரை தவிர்த்துவிடுங்கள். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற பெண்ணுக்குக் காத்திருங்கள், நிச்சயம் வருவார். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment