ஆறு கட்டளைகள்
ஒருவர் எப்படிப்பட்ட பொருட்களுக்கு அதிகம் செலவழிக்கிறார் என்பதைப் பொறுத்தே அவரது ஆளுமை தீர்மானிக்கப்படுகிறது. கஞ்சத்தனம் காட்டாமல் செலவழிக்க வேண்டிய ஆறு விஷயங்களைப் பார்க்கலாம்.
- ஆடைகளுக்கு அதிகம் செலவழிப்பவர் தனித்தன்மையுடன் காட்சியளிக்கிறார்.
- சத்தான உணவுகளுக்கு அதிகம் செலவழிப்பவர் ஆரோக்கியமாக இருக்கிறார்.
- காஸ்ட்லி லேப்டாப் வைத்திருப்பவர் சுலபமாக வேலைகளை முடிக்கிறார்.
- தரமான படுக்கை, சோபா வைத்திருப்பவர் நிம்மதியாக ஓய்வு எடுக்கிறார்.
- புதிய மாடல் செல்போன் வைத்திருப்பவர் தன்னம்பிக்கையுடன் திகழ்கிறார்.
- உதவியாளருக்கு அதிக சம்பளம் கொடுப்பவர், தன் பிரச்னைகளை எல்லாம் அவரிடம் கொடுத்துவிட்டு வாழ்க்கையை அனுபவிக்கிறார்.
பணத்தை மிச்சப்படுத்துகிறேன் என்று லோ காஸ்ட் பொருட்களை வாங்கி, உங்கள் தகுதியையும் மதிப்பையும் குறைத்துக்கொள்ளாதீர்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
