காரணம் இதுதான்.
பெரியவர்களைப் போலவே குட்டியூண்டு குழந்தைகளுக்கும் தனிமை, பயம், சோம்பல், ஏமாற்றம் போன்ற உணர்வுகள் உண்டு. தாயிடம் தாய்ப்பால் குடிக்கும் நேரத்தில் குழந்தைகள் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறார்கள், அதேபோன்ற பாதுகாப்பு கை சூப்பும் நேரத்தில் அவர்களுக்குக் கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பொதுவாக மூன்றாவது மாதத்திலிருந்து தங்கள் உடல் பாகங்களை குழந்தைகள் ஆராயத் தொடங்குகின்றன. விரலை வாயில் வைப்பது மகிழ்ச்சி தருவதை அறியும் சில குழந்தைகள், அந்த செயலைத் தொடர்ந்து செய்கின்றன. குறிப்பாக பசி, பயம், சோர்வு, கோபம் வரும்போதெல்லாம் கை சூப்புகின்றனர்.
நான்கு வயது வரை கை சூப்புவதை ஒரு கெட்ட பழக்கமாகக் கருதி கண்டிக்கத் தேவையில்லை. நிறைய குழந்தைகள் தானாகவே நிறுத்திவிடுவார்கள்.
ஐந்து வயதிலும் கை சூப்புவது தொடர்ந்தால் பல் வரிசையில் மாற்றம் ஏற்படவும், விரல் அசுத்தம் காரணமாக நோய் பரவவும் வாய்ப்பும் உண்டு. மிரட்டுவதும், அடிப்பதும் பயன் தராது என்பதால் அன்பு காட்டி, அரவணைத்து இந்த பழக்கத்தை நிறுத்த முயற்சிக்க வேண்டும்.
கை சூப்பும் நேரங்களில் எல்லாம் குழந்தையின் கையில் பிடிப்பதற்கு பொம்மை அல்லது பந்து கொடுத்து கவனத்தை திசை திருப்பலாம். கை சூப்பும் நேரத்தில் உற்சாகமாக கதை சொல்வது, விளையாட்டு காட்டுவதும் நல்ல பலனளிக்கிறது. இரவு நேரத்தில் கை விரல் மீது உறை போடலாம்.
கை சூப்பும் நேரத்தைக் குறைக்கும்போது விருப்பமான உணவு கொடுத்து பாராட்டுவது சிறந்த முறையில் பயனளிக்கிறது. இந்த பழக்கத்தை குழந்தை கைவிட வேண்டும் என்றால் பெற்றோர் இதற்கென பிரத்யேகமாக கூடுதல் நேரம் செலவழிக்க வேண்டியது அவசியம். நம்பிக்கையுடன் முயற்சி செயல்படுங்கள், மாற்றம் நடக்கும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
