கருணையின் வடிவம்
நாம் வாழும் இந்த பிரபஞ்சம் 450 கோடி ஆண்டுகள் பழமையானது. இங்கு மனித இனம் உருவாகி சுமார் 3 லட்சம் ஆண்டுகளாகிறது. இதுவரை 11,700 கோடி மக்கள் பிறந்திருக்கிறார்கள். இப்போது 825 கோடி மக்கள் உயிருடன் உள்ளனர்.
இத்தனை கோடி மனிதர்களில் அதிக மனிதர்களால் அறியப்பட்ட சிறந்த ஒரே ஒரு மனிதர் என்று வரலாறு யாரை குறிப்பிடுகிறது தெரியுமா..?
அவர் இயேசு கிறிஸ்து. இவரது பிறப்பை வைத்தே கிறிஸ்துக்கு முன், கிறிஸ்துக்குப் பின் என்று காலம் கணக்கிடப்படுகிறது.
தன்னை சிலுவையில் அறைந்தவர்களுக்கும் மன்னிப்பு கேட்டவர், அன்பு, நம்பிக்கை, கருணை, தியாகத்துக்கு அடையாளமாக இன்றும் கருதப்படுகிறார். இவரது போதனைகளை இரண்டாயிரம் ஆண்டுகளாக கோடிக்கணக்கான மக்கள் கேட்டு வருகிறார்கள். சிலுவை இல்லாத இடமே உலகில் இல்லை.
கிறிஸ்துவின் பெயரால் மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் உலகமெங்கும் செயல்படுகின்றன. அதனால், இதுவரை பிறந்தவர்களில் இவரே சிறந்தவர், பாப்புலர் மனிதர் என்று வரலாறு குறிப்பிடுகிறது.
அதேநேரம், இயேசுவை மனிதர் என்று வரலாறு குறிக்கிறது. தேவ மைந்தன் என்று போற்றுவதில்லை. இவருக்கு முன்னதாக கெளதமபுத்தரும் அவருக்கும் முன்பாக மகாவீரர் போன்றவர்களும் அன்பு, கருணை, மன்னிப்பை போதித்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பெயர் உலகம் முழுக்க பரவவில்லை,
எனவே, அதிக மனிதர்கள் அறிந்த சிறந்த மனிதர் இயேசு கிறிஸ்து மட்டுமே. அன்பு, கருணை, மன்னிப்பும் இயேசுவும் ஒன்றுதான். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
