தனிமையில் பாலியல் என்ஜாய்மென்ட்

ஆய்வு ரிப்போர்ட்

மனிதர்கள் பேசுவதற்கு கூச்சப்படும் ஒரு விஷயமாக சுய இன்பம் இருக்கிறது. ஆண், பெண் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு சுய இன்பம் நல்ல வகையில் உதவி செய்கிறது என்று கிளீவ்லாண்ட் கிளினிக் மற்றும் ஐ.எஸ்.எஸ்.எம். ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

இந்திய ஆண்களில் கிட்டத்தட்ட அனைவரும் சுய இன்பம் அனுபவிக்கிறார்கள். பெண்களில் சுமார் 80% பேர் செய்கின்றனர். இதன் மூலம் கிடைக்கும் எண்டோர்பின்கள் எனபடும் மகிழ்ச்சி ஹார்மோன்கள் மன அழுத்தத்தைக் குறைத்து மனதை அமைதியாக்குகிறது, ஆழமான தூக்கத்தை ஊக்குவிக்கிறது.

செலவுகள் இல்லாத இன்பம் என்பதுடன் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் மகிழ்ச்சி அடைய முடியும். குறிப்பாக துணைக்கு விருப்பம் இல்லை என்றாலும், பாதுகாப்பான, எளிதான வழியில் பாலியல் இன்பத்தை அடைய முடிகிறது.

இதை பாலியல் சுயாட்சி என்றே கூறலாம். இளையவர்கள் மட்டுமின்றி பெரும்பாலான வயோதிகரும் இதைச் செய்கின்றனர். எனவே, இதற்கு வயது ஒரு தடை இல்லை. பாலியல் விழிப்புணர்வை அதிகரித்து தேவையற்ற வெட்கத்தைக் குறைக்கிறது.  

மோசமான பாலியல் எண்ணங்களைக் கட்டுப்படுத்தவும், மனதை அமைதிப்படுத்தவும் சுய இன்பம் உதவுகிறது. எனவே, தனிமையில் இனிமை காணுங்கள். பக்கவிளைவுகள் என்றால், துணையின் மீது ஆர்வம் குறையலாம். எனவே, இந்த குறையைத் தவிர்த்து உடல் ரீதியில் எந்த சிக்கலும் இல்லை. என்ஜாய் செய்யுங்கள்.

Leave a Comment