கவித்துவம்
பக்கம் பக்கமாக சொல்லவேண்டியதை எல்லாம் சுருக்கமான வார்த்தைகளில் நறுக்கென சொல்வதே நல்ல கவிதை. சில கவிதைகள் நெஞ்சுக்குள் நுழைந்து உள்ளத்தை அள்ளிக்கொள்ளும். அப்படிப்பட்ட சில கவிதைகள்.
வாழ்வு
எல்லோரும்
அப்படித்தான் வாழ்கிறார்கள்
என்பதற்காக,
எல்லோரும்
அப்படித்தான் வாழவேண்டும்
என்ற அவசியமில்லை.
- லதா
இனிப்பு
ருசி தான்
உலகின்
முதல் விஷம்!
- நேசமித்ரன்
