கவித்துவம்
பக்கம் பக்கமாக சொல்லவேண்டியதை எல்லாம் சுருக்கமான வார்த்தைகளில் நறுக்கென சொல்வதே நல்ல கவிதை. சில கவிதைகள் நெஞ்சுக்குள் நுழைந்து உள்ளத்தை அள்ளிக்கொள்ளும். அப்படிப்பட்ட சில கவிதைகள்.
அனுபவம்
பயணம் செய்ய
இரு வழிகள் உள்ளது,
ஒன்று பயணச் சீட்டு வாங்க வேண்டும்
அல்லது நூல் வாசிக்க வேண்டும்
- முஃதா காஸ்மி
நட்பு
நல்ல நண்பர்கள்
நான்கு பேர் இருந்தால்…
நரகத்துக்கும் செல்லலாம்.
அவர்கள் அதை
சொர்க்கமாக
மாற்றி விடுவார்கள்.
- இறையன்பு
