உங்கள் பிள்ளையும் ஜீனியஸ் ஆகலாம்

பிள்ளை வளர்ப்புக்கு வழிகாட்டும் புத்தகம்

இந்த உலகத்தில் எந்த பெற்றோரும் கொடுக்காத அளவுக்கு பிள்ளைக்கு நான் அன்பு கொடுக்க வேண்டும் என்பது, ஒவ்வொரு பெற்றோரின் கனவாக இருக்கிறது. அதோடு பிள்ளையை நன்கு படிக்கவைக்கவும், பிள்ளைக்கு நிறைய சொத்து சேர்த்துவைக்கவும் ஆசைப்படுகிறார்கள்.

அதிக அன்பு வைப்பதே அதிக பிரச்னைகளுக்குக் காரணமாக இருக்கிறது.  தங்கள் சக்திக்கு மீறி செலவழிக்கிறார்கள். அதனால் பிள்ளைகள் நிறைய மதிப்பெண் பெற வேண்டும், எல்லா விளையாட்டிலும் ஜெயிக்க வேண்டும், நல்ல பிள்ளை என்று பேர் வாங்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

ஆனால், எல்லா பிள்ளைகளுக்கும் எல்லாமே சாத்தியம் இல்லை. குழந்தையின் மூளை வளர்ச்சி நிலையில் இருக்கிறது என்பது பெற்றோருக்குத் தெரிவதில்லை.  அதிக எதிர்பார்ப்புகள் பெற்றோருக்கு அதிக ஏமாற்றத்தை உருவாக்குகின்றன. அந்த ஏமாற்றம், குழந்தை மீது எரிச்சலாக, கோபமாக வெளிப்படுகிறது. கண்டிப்பும், தண்டிப்பும் அதிகரிக்கும்போது வீடு போர்க்களமாக காட்சியளிக்கிறது.

பாசமாக இருப்பதாகச் சொல்லும் பெற்றோரே, அதிக கண்டிப்பு காட்டுவதையும், அதிகம் தொந்தரவு செய்வதையும் பிள்ளைகளால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதனால் பெற்றோரிடமிருந்து விலகத் தொடங்குகிறார்கள். பெற்றோரை அந்நியராக, எதிரியாகப் பார்க்கிறார்கள்.

மனவள ஆலோசகராக நிறைய டீன் வயதினரின் பிரச்னைகளை நேரில் பார்த்துவருகிறேன். அவர்களுடைய குழப்பம், பிரச்னை எல்லாமே வித்தியாசமானவை. ஆனால், ஒவ்வொன்றும் பெற்றோருக்குப் பாடமாகப் பயன்படும். எனவே, சில மாணவர்களின் நிஜமான மனநலப் பிரச்னைகளை பேர் மாற்றி இங்கு சொல்லியிருக்கிறேன்.

பிள்ளை வளர்ப்பு என்பது ஒரு சவால். அன்பு மட்டும் போதாது. சரியான புரிதல், பொறுமை, அக்கறை, தெளிவு இருந்தால் மட்டுமே சரியான வழியில் பிள்ளையை கொண்டுசெல்ல முடியும்.

தினமும் பிள்ளைகளிடம் மனம் விட்டுப் பேசுங்கள். பிள்ளை நடவடிக்கையில் வித்தியாசமான மாற்றம் தெரிந்தால் கவனியுங்கள், கண்காணியுங்கள், வழி காட்டுங்கள். பெற்றோரால் பிரச்னையைத் தீர்க்க முடியவில்லை என்றால் மருத்துவர் அல்லது ஆலோசகர்களை அணுகுங்கள். 

பிள்ளை வளர்ப்பை ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றுவதற்கு இந்த புத்தகம் நிச்சயம் துணை நிற்கும்.

வாங்கிப் படியுங்கள். பிள்ளைகள் வைத்திருக்கும் பெற்றோருக்கு பரிசாகக்கொடுங்கள்.

உங்கள் பிள்ளையும் ஜீனியஸ் ஆகலாம்.

ஞானகுரு பதிப்பகம் வெளியீடு.

விலை ரூ.300 + தபால் செலவு ரூ.60

80725 89355 செல்போன் எண்ணுக்கு பணம், முகவரி அனுப்புங்கள்.

Leave a Comment