எல்லோரும் எழுத்தாளராவது நல்லதா..?

ஞானகுரு பதில்

கேள்வி : சோஷியல் மீடியா வந்த பிறகு எல்லோரும் எழுத்தாளராக, கவிஞராக மாறிவிட்டார்களே..?

  • டி.கண்ணன், காரியாபட்டி.

ஞானகுரு :

எல்லா மனிதர்களிடமும் மிகச்சிறந்த கதை உண்டு. எல்லா மனிதர்களிடமும் கவிதை மனசு உண்டு. ஆனால் எல்லோரும் இதனை வெளிப்படுத்துவதில்லை. ஒரு சிலரை மட்டும் எழுத்துக்கள் தொந்தரவு செய்கின்றன. அவர்களே கவிஞர்களாக, கதாசிரியர்களாக மாறுகிறார்கள்.

அதேநேரம், நிறைய எழுத்தாளர்களின் கதைகளைப் படிக்காமலே கதை எழுதுவதும், முந்தைய கவிஞர்களின் படைப்புகளை அறியாமல் கவிதை எழுதுவதும் முட்டாள்தனத்தின் உச்சம். இப்படிப்பட்ட நபர்களின் படைப்புகள் எரிக்கப்பட வேண்டும். எல்லோருக்கும் எழுதுவதற்கு உரிமை உண்டு என்றாலும், ஒரு நல்ல ரசிகனாலே சிறந்த படைப்பாளியாக மாற முடியும் என்பதே உண்மை. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment