ஞானகுரு பதில்
கேள்வி : உடல் வலிமையால் தவறு செய்பவர்கள் அதிகமா அல்லது பணம் இருப்பதால் அதிகம் தவறு செய்கிறார்களா..?
- எஸ்.வீரலட்சுமி சந்தோஷ், கடலூர்.
ஞானகுரு :
ஒருவருக்கு உடல் பலமாக இருக்கிறது என்றால், அவர் சமாதானம் விரும்புபவராக மட்டுமே இருப்பார். ஒரு காலத்திலும் தவறான விஷயத்துக்கு சண்டை போட மாட்டார். அதேபோல், பணம் வைத்திருப்பவர்கள் அதனை பாதுகாக்கவும் பெருக்கவும் நினைப்பார்கள், தவறு செய்து மாட்டிக்கொள்ள விரும்ப மாட்டார்கள்.
திடீர் பணக்காரர்களும் அதிகார போதையில் மிதப்பவர்களும் தான், தங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று குருட்டு நம்பிக்கையில் தவறு மேல் தவறு செய்கிறார்கள். இன்னும் சொல்லப்போனாலும் குறுக்குவழியில் முன்னேற நினைப்பவர்களே தவறு செய்கிறார்கள். இப்படிப்பட்ட நபர்களிடம் இருந்து விலகி நில்லுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
