பிள்ளை மனம் கல்லாக இருக்கிறதே…?

ஞானகுரு பதில்

கேள்வி : எங்களுக்கு ஒரே மகள். இவள் நன்மைக்காக இன்னொரு பிள்ளை பெறாமல் அன்பு கொட்டி வளர்த்தோம். ஆனால், அவள் எங்களை மதிக்காமல் அவமானப்படுத்துகிறாள். இதை நினைத்து அழுகை வருகிறது… என்ன செய்வது..?

  • ஜி.தெய்வலதா, தாராபுரம்

ஞானகுரு :

நீங்களே பிள்ளை பெற்றீர்கள், அவர் உங்களை பெற்றெடுக்குமாறு கெஞ்சவில்லை. இன்னொரு பிள்ளை வேண்டாம் என்பதும் உங்கள் முடிவு. உங்கள் மகிழ்ச்சியை தியாகம் செய்யுங்கள் என்றும் அவர் கேட்கவில்லை. எனவே, இந்த காரணங்களுக்காக அவர் உங்களை மதிக்க வேண்டும், பாசத்தைப் பொழிய வேண்டும் என்று எதிர்பாப்பது நியாயம் இல்லை.

நீங்கள் பெற்றெடுத்த கடமைக்கு பிள்ளையை நன்கு படிக்க வையுங்கள். விரும்பும் கலைகளை கற்றுக்கொடுங்கள். பருவ வயது வந்ததும் அவரது வாழ்க்கைப் பாதையை அவரே தேர்வு செய்வதற்கு உதவி செய்யுங்கள். ஜெயித்தால் பாராட்டுங்கள், தோற்றால் ஊக்கம் கொடுங்கள். அதுவே, ஒரு நல்ல பெற்றோருக்கு அழகு.

பிள்ளையிடம் பாசத்தை பிச்சை கேட்காதீர்கள். அவமானமே கிடைக்கும். இனியிருக்கும் வாழ்க்கையை உங்களுக்காக வாழுங்கள். உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செயல்களை மட்டும் செய்யுங்கள். மகிழ்ச்சியாக வாழுங்கள்.

Leave a Comment