ஞானகுரு பதில்
கேள்வி : குழந்தை இல்லை என்ற குறை பெரும் கவலையாக இருக்கிறது.. இது சாபமா..?
- என்.ராமலட்சுமி, அரவக்குறிச்சி.
ஞானகுரு :
மருத்துவ வளர்ச்சி உச்சம் அடைந்திருக்கும் நேரத்தில் குழந்தை இல்லை என்று கவலைப்படுவதற்கு அவசியமே இல்லை. உடலில் எப்படிப்பட்ட குறை இருந்தாலும் அதை சரி செய்து, சீர்செய்து அல்லது செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். மருத்துவத்தில் குழந்தை பெற முடியாது என்றாலும் தத்து எடுத்துக்கொள்ள முடியும்.
வேறு ஒரு வழியிலும் குழந்தை இல்லாத கவலையை தீர்த்துக்கொள்ள முடியும். அதாவது, குழந்தை பெற்றும் பெரும் கவலையுடன் வாழும் சில பெண்களைப் பாருங்கள். அதாவது, மனவளர்ச்சி குன்றியவர்கள், ஆட்டிசம் உள்ள குழந்தையைப் பெற்ற பெண்களின் வாழ்க்கையைப் பாருங்கள்.
அந்தக் குழந்தையை மகிழ்ச்சியாக வளர்க்க முடியாமல், கைவிடவும் முடியாமல் வாழ்நாள் முழுக்க அவஸ்தைப்படுகிறார்கள். எந்த தாயும் இப்படிப்பட்ட பிள்ளைகளைக் கைவிடுவதில்லை. இந்த பெண்களை ஒப்பிடுகையில் குழந்தை இல்லாத குறை என்பது ஒரு சாபமல்ல என்பது புரியவரும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
