விதியை வெல்ல கடவுளால் முடியுமா?

ஞானகுரு பதில்

கேள்வி : கர்மா பெரிதா… கடவுள் பெரிதா..?

  • சி.மாணிக்கவாசகம், சேயூர்.

ஞானகுரு ;

எந்த ஒரு செயலுக்கும் ரியாக்‌ஷன் உண்டு என்பது அறிவியல். அதேபோல் மனிதர்கள் செய்யும் செயல், எண்ணம், வார்த்தை போன்றவை எல்லாமே அவருக்குத் திரும்பிவரும் என்று பல்வேறு மதங்களும் போதிக்கின்றன. இந்த ஜென்மத்தில் செய்த செயலுக்கு இந்த வாழ்க்கையில் அல்லது அடுத்த ஜென்மத்தில் கூட பலன் கிடைக்கலாம் என்கிறார்கள். இதையே விதி, கர்மா, தலையெழுத்து என்றெல்லாம் சொல்கிறார்கள்.

இந்த கர்மாவை யாராலும் மாற்றவே முடியாது என்று சொல்வார்கள். அவர்களே இன்னொன்றும் சொல்வார்கள். அதாவது, கடவுளுக்கு பூஜை செய்தால், பரிகாரம் செய்தால், மனமுருக பிரார்த்தனை செய்தால் பாவங்கள் தொலைந்துவிடும், விதியை மாற்றிவிடலாம் என்றும் சொல்வார்கள்.

கர்மாவை மாற்றவே முடியாது என்றால் கடவுள் எதற்கு..? கடவுளால் மாற்ற முடியும் என்றால் கர்மா எதற்கு..? என்று யோசித்துப் பாருங்கள். கடவுளும் கர்மாவும் மனிதருக்குத் தேவையில்லாத ஆணிகள் என்பது புரியும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.  

Leave a Comment