உங்கள் மகிழ்ச்சியைக் கண்டுபிடியுங்கள்

சிம்பிள் ரூல்ஸ்

வீடு, பள்ளி, கல்லூரி, பணியிடம் என்று எல்லா இடங்களிலும் யாரோ ஒருவருடைய அங்கீகாரத்துக்காக மனிதர்கள் ஏங்கிக்கொண்டே இருக்கிறார்கள். பெற்றோர் மகிழ்ச்சி அடைவார்கள், ஆசிரியர் பாராட்டுவார், உயர் அதிகாரி மதிப்பாக நடத்துவார், உறவினர்கள் பெருமைப்படுவார்கள் என்று அடுத்தவர்களுக்காகவே காலம் முழிக்க வாழ்கிறார்கள்.

மற்றவர்களை திருப்திபடுத்தற்காக ஆற்றல், சிந்தனை, திறமைகளைப் பயன்படுத்துவதால், சொந்த வாழ்க்கையை மறந்துவிடுகிறார்கள்.

தனக்கு என்ன வேண்டும், எனக்கு எது மகிழ்ச்சி தரும், என்னுடைய தனித்திறன் என்ன, எதை நோக்கி என் வாழ்க்கை நகர்கிறது என்பது போன்ற கேள்விகளுக்கு நிறைய மனிதர்களிடம் பதில் இருப்பதில்லை.

எனவே, முதலில் ஒவ்வொரு மனிதரும் அவருக்கு என்ன வேண்டும், அவருக்கு எது மகிழ்ச்சி தருகிறது என்பதைக் கண்டுபிடிக்க முன்னுரிமை தர வேண்டும். அப்படி கண்டுபிடித்த மகிழ்ச்சியை தினமும் அரை மணி நேரமாவது அனுபவிக்க வேண்டும். அதன் பிறகே பிறருக்காக வாழ வேண்டும்.

தங்களுடைய மகிழ்ச்சியைக் கண்டுபிடித்தவர்களை சோகமும் தோல்வியும் பாதிப்பதில்லை. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment