குறிச்சு வைச்சுக்கோங்க
உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர், உடன் பணியாற்றுபவர்கள் என எல்லோரிடமும் சுமூகமான உறவு இருந்தால் வாழ்க்கைச் சக்கரம் சந்தோஷமாக நகரும் என்பது உண்மை. இப்படிப்பட்ட உறவுகள் எப்போதும் இன்பமாக மட்டும் இருக்க வேண்டும் என்றால் இந்த ஐந்து கட்டளைகளை கடைப்பிடியுங்கள்.
- அன்பு செலுத்தவும், நேரம் ஒதுக்கவும் கேட்டு யாரிடமும் கெஞ்சாதீர்கள்.
- உங்களை புறக்கணிக்கிறார் என்று தெரிந்தால் நீங்களாகவே ஒதுங்கிக்கொள்ளுங்கள்.
- உறவு வேண்டும் என்பதற்காக, அவருக்குப் பிடித்த வகையில் மாறாதீர்கள்.
- ஆபத்து நேரத்தில் எல்லோரும் உதவி செய்யவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.
- ஒருவரது செயல் பிடிக்கவில்லை என்றால் அமைதியாக விலகிவிடுங்கள், திருத்தப்போகிறேன் என்று மல்லுக்கட்டாதீர்கள்.
வாழ்க்கைக்கு எல்லோரும் தேவை என்பது உண்மை. அதேநேரம், எல்லோருக்கும் ஒரு எல்லைக் கோடு இருக்கிறது. பிறருக்காக உங்கள் வாழ்க்கையையும் சந்தோஷத்தையும் விட்டுக்கொடுக்காதீர்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
