சியர் அப் கேர்ள்ஸ்
உணவு போலவே பாலியல் உணர்வுகளும் மனிதர்களின் உடலுக்கும் மனதுக்கும் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்று. குடும்பம், கணவன் – மனைவி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டதே உடல் தேவைகளை பரஸ்பரம் இருவரும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
ஆனால், இங்கு ஆண்களின் பாலியல் தேவைகள் எளிதாக பூர்த்தியாகின்றன. ஆசை வரும்போது மனைவியிடம் கெஞ்சி அல்லது ஏமாற்றி அல்லது வற்புறுத்தி அல்லது கட்டாயப்படுத்தியாவது தன் தேவைகளை ஆண் பூர்த்தி செய்து கொள்கின்றான். ஆசை முடிந்ததும் நிம்மதியாக தூங்கிப் போகிறான்.
அதேநேரம் பெண்களுக்குப் பாலியல் தூண்டல் ஏற்படும் நேரத்திலும், தங்கள் ஆசையை வாய்விட்டுக் கேட்பதற்கு வெட்கப்படுகிறார்கள். தங்கள் உடல் ஆசையைப் பற்றி பேசுவது அசிங்கம் அல்லது கணவனை படுக்கைக்கு கூப்பிடுவது குடும்பப் பெண்ணுக்கு அழகல்ல என்று நினைக்கிறார்கள்.
அதோடு, தன்னுடைய பாலியல் ஆசையை கணவனால் முழுமையாகத் தீர்க்க முடியாது என்பதில் பெண் உறுதியாக இருக்கிறாள். ஏனென்றால், ஆணுக்கு அவன் ஆசை மட்டுமே முக்கியமே தவிர, பெண்ணின் திருப்தி அல்ல. அதனால் கணவனால் தனக்கு பாலியல் உச்சம் கிடைக்கப்போவதில்லை என்பதாலும் ஆசையை அடக்கிக் கொள்கிறார்கள்.
இந்த ஏமாற்றமே கோபமாக, அழுகையாக மாறுகிறது. பெண்கள் அதிகம் பேசுவதும், சின்ன விஷயத்துக்கு பெரிதாக ரியாக்ட் செய்வதற்கும் இந்த ஏமாற்றமே முக்கிய காரணமாக இருக்கிறது.
கணவன் மூலம் பாலுறவில் உச்சகட்டத்தை பெரும்பாலான பெண்கள் அனுபவித்ததே இல்லை என்பதையே இன்றைய மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்கின்றன. கணவன் மட்டும் இன்பம் அனுபவித்தால் போதும், என்று மனைவி சகித்துக்கொள்கிறாள், தன்னைத்தானே திருப்தி படுத்திக்கொள்கிறார்கள்.
இந்த விஷயத்தில் பெண்கள் அமைதியாக இருப்பது நியாயம் அல்ல. ஆண் எத்தனை உரிமையுடன் இன்பம் பெறுகிறோனோ, அதே அளவு உரிமை பெண்ணுக்கும் உள்ளது. சுதந்திரமும் இன்பமும் கேட்டுப் பெறுவது அல்ல. பெண்களே எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். இதுதான், இன்பமான தாம்பத்தியத்திற்கு வழிகாட்டி. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
