சைக்கோ மனிதர்கள், ஜாக்கிரதை

அடையாளம் பாருங்கள்

மனநிலை பாதிக்கப்பட்ட ஒருசிலர், பிறரை துன்புறுத்தி இன்பம் காணும் சைக்கோ குணத்துடன் இருக்கலாம். சிலர் சைக்கோ கில்லர்களாக இருக்கலாம். இந்த சைக்கோ மனிதர்களை உருவத்தை வைத்து அடையாளம் காண்பது முடியாது. சிலரது செயல், அறிகுறிகளை வைத்து சைக்கோ குணத்தைக் கண்டுபிடிக்கலாம்,

  • மிகப்பெரிய பொய்களைக் கூட நம்பும் வகையில் சொல்வார்கள். உண்மைகளை அப்பட்டமாக மறைப்பார்கள்.
  • ஆசையைத் தூண்டும் வகையில் பேசுவார்கள். பெரிய பெரிய பிராமிஸ் செய்வார்கள்.
  • பிறருக்குத் துன்பம், கவலை, வருத்தம் தரக்கூடிய விஷயங்களை மீண்டும் மீண்டும் பேசுவார்கள்.
  • விலங்குகள், சிறியவர்கள் மற்றும் முதியவர்கள் மீது காரணமேயின்றி வன்முறை காட்டுவார்கள்.
  • பொது இடங்களில் நல்லவராகவும் தனிப்பட்ட முறையில் கொடூரமாகவும் நடந்துகொள்வார்கள்.
  • பயம், பதட்டம், அச்சம் இல்லாமல் குற்றக் காரியங்களைச் செய்வார்கள். எதிர்ப்பவர்கள் மீது வன்முறை செலுத்துவார்கள்.
  • தவறு செய்த பிறகு அதற்காக எந்த குற்றவுணர்வும், மனவேதனையும் இல்லாமல் நடந்துகொள்வார்கள்.
  • அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதில் மட்டும் குறியாக இருப்பார்கள், பிறர் பேசுவதைக் கவனிக்கவும் கண்டுகொள்ளவும் மாட்டார்கள்.
  • தன்னுடைய விருப்பம், தன்னுடைய ஆசைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
  • அம்மா, மனைவி, மகள் என்றெல்லாம் யார் மீதும் தனிப்பட்ட வகையில் அன்பு அல்லது பாசம் வைக்க மாட்டார்கள்.

மனநிலை பாதிக்கப்பட்ட எல்லா சைக்கோபதிகளும் கொலை செய்யக்கூடியவர்கள் அல்ல. ஆனால், பிறரது உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் துன்பப்படுத்தி ரசிக்கும் எல்லோரும் ஆபத்தானவர்கள். எனவே இப்படிப்பட்ட நபர்களை அடையாளம் கண்டு ஒதுங்கிவிடுவது நல்லது. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment