துன்பத்தை இன்பமாக்கும் 5 பாதைகள்

ஹேப்பி சீக்ரெட்ஸ்

துன்பம், துயரம் இல்லாத மனிதர் யாரும் இல்லை. ஆனால், துன்பம் எல்லோரையும் ஒரே அளவுக்குக் காயப்படுத்துவதில்லை. நோய், மரணம், எதிர்ப்பு, தோல்வி, பயம், அச்சம், அவமதிப்பு, பலவீனம் போன்ற எத்தனையோ காரணங்களால் துன்பம் உருவாகலாம். எப்படிப்பட்ட துன்பம் என்றாலும் அதை இன்பமாக மாற்றுவதற்கு ஐந்து வழிகள் உள்ளன. 

  1. தவிர்க்க முடியாததை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். இன்னும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்திருக்கலாம், பிறர் சொன்னதைக் கேட்டிருக்கலாம் என்றெல்லாம் கவலைப்படுவதால், நடந்தது எதுவும் மாறிவிடப் போவதில்லை. இந்த தெளிவு தான், துன்பத்தில் இருந்து வெளியேறுவதற்கு முதல் பாதை.  
  2. எதையாவது இழுத்துப் போட்டுக்கொண்டு வேலை செய்து பிஸியாக இருங்கள். நிறைய வேலைகள் இருப்பவருக்கு கவலைப்படுவதற்கு நேரம் கிடைக்காது.
  3. யாரும் காப்பாற்ற வருவார்கள் என்று நம்பி ஏமாறாதீர்கள். உங்கள் பிரச்னையை நீங்கள் மட்டுமே தீர்க்க முடியும் என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்.
  4. எதிர்காலம் பற்றிய அச்சமே நிறைய பேரை துன்புறுத்துகிறது. இன்றைய தினத்தில் வாழுங்கள். நாளை நல்லதாக நடக்கும் என்று உறுதியாக நம்புங்கள். அந்த நம்பிக்கையே கவலையை விரட்டும் மாமருந்து.
  5. நீங்கள் துன்பத்தில் இருக்கும்போதும் பிறருக்கு முடிந்த வரை உதவி, நன்மை செய்யுங்கள். அடுத்தவரின் மகிழ்ச்சியில் உங்கள் கவலையை எளிதாக மறக்க முடியும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment