காதலனுக்கு குட் பை சொல்லுங்கள்.

உளவியல் ஆலோசனை

காதல் புனிதமானது. நம்பிக்கை என்பதன் அடிப்படையில் காதல் உருவாகிறது. அதேநேரம் இன்று பணம் பறிக்கவும், இன்பம் அனுபவிக்கவும் திட்டமிட்டு காதல் செய்து ஏமாற்றும் இளைஞர்களும் இருக்கவே செய்கிறார்கள். இப்படிப்பட்ட போலி காதலனை அடையாளம் கண்டுபிடிக்க ஆறு வழிகள் உள்ளன. 

  • யாருக்கும் தெரியாமல் ரகசியமாகக் காதலிப்பவரை நம்பாதீர்கள். தோழர்கள், உறவினர்களிடம் தைரியமாக அறிமுகம் செய்துவைக்காமல், ரகசியமாக உறவு தொடர்வதற்கு என்ன காரணம் சொன்னாலும், அவர் நிச்சயம் சரியான நபர் இல்லை.  
  • அழகாக இருக்கிறாய் என்ற பாராட்டு எல்லா பெண்களுக்கும் பிடிக்கும். அதற்காக தேவையில்லாத நேரங்களிலும் அடிக்கடி அழகை பாராட்டுகிறார் என்றால் எச்சரிக்கையாக இருங்கள். அறிமுகத்துக்கு மட்டுமே அழகு தேவை. அதன் பிறகும் அழகை பொய்யாகப் புகழ்பவர் சீட்டிங் நபராக இருக்கலாம்.
  • நீ என்னை புரிந்து கொண்டதை போல் என்னை யாரும் புரிந்துகொண்டே இல்லை என்று ஒருவர் சொல்வது அப்பட்டமான பொய். ஏனென்றால். யாரும் யாரையும் முழுமையாக புரிந்துகொள்ளவே முடியாது. இது, ஒரு கவிழ்ப்பதற்காக கூறப்படும் வார்த்தைகள்.
  • காதலுக்காக உயிரைக் கொடுப்பேன் என்பது உணர்வு பூர்வமான மிரட்டல். பக்குவம் அடையாதவர், பிளாக்மெயில் செய்பவரே இப்படி பேசுவார்கள்.  
  • எல்லா நேரமும் சந்திப்பதற்கு முன்கூட்டியே வந்து காத்திருக்கிறார் என்றால் அவரை சந்தேகப்படுங்கள். காலதாமதம் பல நேரங்களில் தவிர்க்க முடியாதது. அப்படி இல்லாமல் காதலுக்காக முழு நேரத்தையும் ஒதுக்கி காத்திருக்கிறார் என்றால் அவர் தப்பான நபர்.
  • சம்பாதிக்கும் அளவுக்குத்தான் செலவழிக்க வேண்டும். ஆடம்பரத்தைக் காட்டி மயக்கும் நபரிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

இந்த 6 அடையாளங்களில் இரண்டுக்கும் மேலாக உங்கள் காதலரிடம் இருந்தால் உஷாராகி தப்பித்துவிடுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment