திருமணமான காதலர்கள் பிரிவது ஏன்..?

வெரி சிம்பிள் லாஜிக்

காதல் என்பது அற்புதமான அனுபவம். காதல் கிடைப்பது வரம். ஆனாலும், இந்த உலகில் 80 சதவிகித லவ் அடுத்த கட்டமான மேரேஜ் என்ற பந்தத்தில் நுழையாமல் ஃபெயிலியர் ஆகிறது. சுமார் 20 சதவிகித காதலர்கள் திருமணம் முடித்துக்கொண்டாலும், அவர்கள் திருப்தியான தம்பதியாக வாழ்வதில்லை. காதல் திருமணத்தில் கிட்டத்தட்ட 37 சதவீதம் தோல்வி அடைகிறது என்கிறது ஒரு புள்ளிவிபரம்.

உயிருக்கு உயிராக காதலித்துத் திருமணம் செய்பவர்கள் மேரேஜ்க்குப் பிறகு ஏன் பிரிகிறார்கள் தெரியுமா..?

காதலன் அல்லது காதலியாக இருந்த காலத்தில் கிடைத்த மகிழ்ச்சி திருமணத்தில் கிடைக்கவில்லை என்பதே தோல்விக்கு முக்கியக் காரணம். அதாவது,  காதலர்களும் தம்பதிகளும் ஒன்றல்ல என்பதைப் புரிந்துகொள்ளாத காரணத்தாலே தோல்வி அடைகிறார்கள்.

இதன் அர்த்தம் என்னவென்றால், திருமணத்திற்குப் பிறகு இருவரும் காதலர்களாகவே இருக்க முயற்சிக்கக்கூடாது. ஏனென்றால் காதலுக்கு பொறுப்புகள் இல்லை. பொருளாதார நிர்ப்பந்தம் இல்லை. காலம், நேரம் என்ற கட்டுப்பாட்டு இல்லை. ஆனால் கணவன், மனைவி உறவுக்கு  ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்  உண்டு.

பணம் சம்பாதிப்பது, சேமிப்பது, வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது, குழந்தை பெறுவது, குழந்தை வளர்ப்பு, பதவி உயர்வு போன்ற எக்கச்சக்க கடமைகள் தம்பதிக்கு உண்டு. அதோடு, குடும்பத்தில் ஒரு சிலரை அட்ஜெஸ்ட் செய்யும் சூழல் வரும். ஆசைகளை தியாகம் செய்ய வேண்டியிருக்கும். இப்படி மாறிக்கொள்ளும் காதலர்களே குடும்ப  வாழ்க்கையிலும் வெற்றி அடைகிறார்கள். திருமணத்துக்குப் பிறகும் காதலில் கிடைத்த அளவுக்கு மகிழ்ச்சியை மட்டும் எதிர்பார்த்தால் ஏமாற்றமும், வேதனையும், வலியுமே மிஞ்சும்.

எனவே, காதல் செய்து திருமணம் செய்பவர்கள் தங்களை தம்பதியர்களாக மாற்றிக்கொள்ளூங்கள் அப்போதுதான் காதலும், கல்யாணமும் ஜெயிக்கும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment