பெண்களின் கண்ணீர் பொய்தானே..?

ஞானகுரு பதில்

கேள்வி : பெண்கள் எளிதில் அழுதுவிடுகிறார்களே, ஏன்..?

  • சி.சரவணன், மணிநகரம்.

ஞானகுரு :

பெண்கள் எல்லோரிடமும், எல்லா இடங்களிலும் அப்படியெல்லாம் கலங்கிவிடுவதில்லை. பெரும்பாலும் மனதுக்கு நெருக்கமான நபர்களிடம் மட்டுமே அப்படி நடந்துகொள்கிறார்கள். அதேநேரம், புரோலாக்டின் என்ற ஹார்மோன் ஆண்களைவிட பெண்களுக்கு 60 சதவிகிதம் அதிகமாகவே சுரப்பதும் அறிவியல் காரணமாக இருக்கிறது. அதனால்தான், சட்டென்று கண்ணீர் சிந்தி எதிராளியை அதிரவைக்க முடிகிறது.

 ஒரு சில பெண்கள், சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் ஆயுதமாக கண்ணீரை பயன்படுத்துகிறார்கள். இதற்கு இணையான வேறு ஓர் ஆயுதம் இந்த உலகில் இல்லை.

அதேநேரம் போராட முடிவு செய்துவிட்ட பெண்கள் கண்ணீர் சிந்துவதில்லை. பிரசவ வலியில் பெண்கள் கத்தி, கூப்பாடு போடுவார்களே தவிர, கண்ணீர் சிந்த மாட்டார்கள். ஒரு முடிவு எடுத்துவிட்டால் அது எத்தனை வேதனை தந்தாலும் அதற்காக கண்ணீர் சிந்த மாட்டார்கள். எனவே, பெண்களின் கண்ணீரை எச்சரிக்கையுடன் கையாளுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment