சுலபமாக முக்தி அடைய வழி தெரியுமா..?

ஞானகுரு பதில்

கேள்வி : முக்தி பெற என்ன செய்ய வேண்டும்?

  • ஏ.வள்ளியம்மாள், சென்னை.

ஞானகுரு :

முற்பிறவி, மறுபிறவி போன்ற துன்பங்களிலிருந்து விடுபட்டு இறைவன் பாதத்தில் மோட்சம் அடைவதையே முக்தி என்கிறார்கள். இந்து மதத்தில் முக்தி அடைவதற்கு பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், கர்ம மார்க்கம், தியான மார்க்கம் என்று பல வழிகள் காட்டப்பட்டுள்ளன.

ஆனால், இது வரை எந்த மனிதரும் முக்தி அடைந்ததற்கு ஆதாரம் கிடையாது. அதேபோல் முற்பிறவி, மறுபிறவிக்கும் ஆதாரம் கிடையாது. முக்தி குறித்து எழுதப்பட்ட எல்லாமே மனிதர்கள் எழுதியவை மட்டுமே. எனவே, யாருக்கும் தெரியாத, புரியாத முக்திக்காக மனிதர்கள் முயற்சிக்க வேண்டிய அவசியம் இல்லை. .

இந்த பிரபஞ்சத்தில் படைக்கப்பட்டுள்ள அத்தனை உயிர்களும் வாழும் வரை போராடிக்கொண்டே இருக்கின்றன. மனிதர்களும் அந்த பாதையில் செல்ல வேண்டும் என்பதே இயற்கை காட்டும் வழி. இந்த பிறவியை பிறருக்குத் துன்பம் தராத வகையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து தீர்த்துவிடுங்கள். மகிழ்ச்சியான மரணமே நிஜமான முக்தி. அதற்காக ஆசைப்படுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment