ஞானகுரு பதில்
கேள்வி : என்னை எல்லோருமே ஏமாற்றுகிறார்கள், ஏன்..?
- சி.வாணி, ராமநாதபுரம்
ஞானகுரு :
யார் அதிகம் பேராசைப்படுகிறார்களோ, அவர்களே அதிகம் ஏமாற்றப்படுகிறார்கள். மண்ணுளிப் பாம்பு, கோபுரக் கலசம், ஈமுக் கோழி, சந்தன மரம், எம்.எல்.எம். போன்ற எல்லாமே சீட்டிங் என்று தெரிந்தாலும், பேராசை கண்களை மறைத்துவிடுகிறது. ஒரு முறை ஏமாறுவது தவறு அல்ல. எல்லோரிடமும் ஏமாறுவது என்றால் பேராசைக்குத் தண்டனை என்றே அர்த்தம்.
எனவே அதிகம் ஆசைப்பட வேண்டாம். யாரையும் நம்பவும் வேண்டாம். ஆசையே துன்பம் தரும் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
