பிரேக்கப் ஆனதும் என்ன செய்ய வேண்டும்..?

ஆண்களுக்கு யோசனைகள்

காதல் இனிமையான அனுபவம். எல்லோருக்கும் அந்த அனுபவம் கிடைப்பதில்லை. அதேநேரம் எல்லா காதலும் திருமணத்தில் முடிவதில்லை. பெரும்பாலான காதல் தோல்விக்கு பெண்களையே ஆண்கள் குற்றம் சாட்டுகிறார்கள். எதிர்பாராமல் காதல் உடையும்போது, பிரேக்கப் நிகழும்போது ஆண்கள் இந்த 5 உண்மைகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒன்று : ஒரு பெண் பிரிந்துவிட்டார் என்பதால் உலகமே உங்களை வெறுத்துவிட்டது என்று அர்த்தம் இல்லை. அவரை விட சிறந்த துணை உங்களுக்குக் கிடைக்கப் போகிறார் என்று நம்புங்கள்.

இரண்டு. என்ன காரணத்துக்காக அவர் உங்களைப் பிரிந்தாரோ, அந்த குறையை சரிசெய்துகொள்ளுங்கள். உங்களை முன்னை விட அதிகம் மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

மூன்று. இயந்திரம் போன்று ஒரே வாழ்க்கையை திரும்பத்திரும்ப வாழும் ஆண்களை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. எனவே, செக்குமாடு போன்று வாழும் மனநிலையை மாற்றிக் கொள்ளுங்கள்.

நான்கு ; காதல் தோல்வியை யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஒரு பரீட்சையில் ஃபெயில் ஆனால் மீண்டும் எழுதி பாஸ் ஆக முடியும் என்ற மனநிலையில் இந்த காதல் தோல்வியையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

ஐந்து : ஏமாற்றிய பெண்ணை பழி வாங்கத் துடிக்காதீர்கள். நீங்கள் அவர் முன்பு சிறப்பாகவும் உயர்வாகவும் வாழ்ந்து காட்டுவதே சிறப்பான பழி வாங்குதல். அதற்காக முன்னிலும் சிறப்பாக உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

காதல் தோல்வி வலி கொடுக்கும் என்றாலும் அதற்காக அழுவது, தாடி வளர்ப்பது, மது குடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள். உங்களை இந்த தோல்வி எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்பது போன்று மனதை தேற்றிக்கொண்டு இயல்பாக வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள். விரைவில் நல்லதொரு துணை கிடைப்பார். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment