இந்த ஆண்களை மட்டும் நம்பாதீங்க…

உஷார் பெண்களே…

கல்யாணமான பெண்களை கரெக்ட் செய்து ஏமாற்றுவதற்கு நிறைய ஆண்கள் திட்டம் போட்டு வஞ்சகமாகப் பேசுவார்கள். இவர்களுடைய குறிக்கோள் அந்த பெண்களை அனுபவிப்பது அல்லது பணம் ஏமாற்றி சுருட்டுவதாக இருக்கும். இந்த வகை ஆண்கள் பேசும் 10 சீட்டிங் டயலாக்கை அறிந்துகொள்ளுங்கள்.

  • இந்த உலகத்திலேயே உங்க ஹஸ்பெண்ட் தான் ரொம்பவும் அதிர்ஷ்டசாலி
  • அது எப்படிங்க, எல்லா நேரமும் அழகாவே இருக்கீங்க..
  • எனக்கு உங்களைப் போல ஒரு பொண்டாட்டி கிடைச்சிருந்தா கொண்டாடியிருப்பேன்.
  • மாநிறமா இருந்தாலும் பேரழகியா இருக்கலாம்னு உங்களைப் பார்த்துத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்.
  • நிறைய பேருக்கு சேலை அழகாவே இருக்காது. நீங்க சேலையிலேயும் நல்லா இருக்கீங்க, சல்வாரிலும் கலக்குறீங்க.
  • உங்க ரேஞ்சுக்கு எப்படிங்க இவரை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னீங்க
  • உங்க முகத்தைப் பார்த்துட்டுப் போனா எல்லா விஷயமும் சக்சஸ் ஆகுதுங்க
  • பொண்ணுங்களிடம் நான் பொதுவா பேசுறதே இல்லை, உங்ககிட்டே மட்டும்தான் எப்படியோ மாட்டிக்கிட்டேன்.
  • தயவுசெஞ்சு என்னை பார்த்து சிரிக்காதீங்க… ராத்திரி தூக்கமே வர மாட்டேங்குது.
  • உங்களுக்கு ஏதாவது பிரச்னைன்னா என்னால சும்மா இருக்க முடியாதுங்க….

இப்படி பேசுவது எல்லாமே காரியம் சாதிப்பதற்கு மட்டுமே என்பதை புரிந்துகொள்ளுங்கள். கல்யாணம் முடிந்த ஓரிரு வருடங்களில் எல்லா பெண்களுக்கும் வாழ்க்கையில் சுவாரஸ்யம் குறைந்திருக்கும். கணவர் பாராட்டுவதை நிறுத்தியிருப்பார். அந்த காலகட்டத்தில் அதிருப்தியுடன் இருக்கும் பெண்களை குறிவைத்து இப்படி டயலாக் பேசி ஏமாற்றும் நபர்களிடம் மாட்டிக்கொள்ளாதீர்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment