மற்றவர் முன்பு எப்படி வாழவேண்டும்..?

ஓப்பீடுகளே ஆபத்து

அடுத்தவர் முன்பு சிறப்பாக வாழ வேண்டும், தெரிந்தவர்கள் முன்பு அசிங்கப்படக் கூடாது, எல்லோரும் பாராட்ட வேண்டும் என்று பிறர் அங்கீகாரத்துக்காகவே நிறைய பேர் வாழ்கிறார்கள்.  மத்தவங்க தப்பா நினைப்பாங்க, எல்லோரும் கேலி செய்வார்கள், தலைகுனிவா போயிடும் என்றும் பற்றியே கவலைப்படுகிறார்கள்.

உண்மையில் அடுத்தவர்கள் என்பது யார்..?

அடுத்தவர்கள் என்று நினைக்கும் நபர்கள் உங்களை விட உயர்ந்தவர்களா..? மற்றவர்களால் உங்களுக்கு என்ன நன்மை கிடைத்திருக்கிறது..? பிற மனிதர்கள் கை கொடுத்து உதவுகிறார்களா என்றெல்லாம் சிந்தித்துப் பாருங்கள். அடுத்தவர்களால் நமக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்பது புரியும். ஆகவே, பிறருக்காக வாழ வேண்டிய அவசியம் யாருக்கும் கிடையாது..

அவரவர் வாழ்க்கையே முக்கியம். நமது வாழ்வின் முன்னேற்றம், நமது வாழ்வின் வழிமுறை, நமது நிம்மதி ஆகியவைகளுக்கே முக்கியத்துவம் தர வேண்டும்.

அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசிக்கும்போது, நீங்கள் அவர்களுக்கு அடிமையாகி விடுகிறீர்கள். அடுத்தவர்களை ஒப்பிட்டுப் பார்க்கவும், வாழவும் தொடங்கிவிடுவீர்கள். இந்த ஒப்பீடு வாழ்க்கை எப்போதும் துன்பமே தரும்.

பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பது என் கவலை இல்லை என்ற மந்திரத்தைச் சொல்லிக்கொண்டு உங்கள் வழியில் வாழ்ந்து பாருங்கள். அதுவே நிம்மதியான வாழ்க்கை. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment