பணம் பற்றி ரஜினிகாந்த் சொல்வதை நம்பலாமா..?

ஞானகுரு பதில்

கேள்வி : பணம் முக்கியம் இல்லை என்று ரஜினிகாந்த் பேசுகிறார். ஆனாலும் அவரிடம் பணம் சேர்கிறது. பணம் முக்கியம் என்று நினைக்கும் என்னிடம் பணம் சேர்வதே இல்லை. ஏன் இந்த முரண்பாடு..?

  • சி.பாஸ்கர்ராஜா, தென்காசி.

ஞானகுரு :

கோடி, கோடியாக சொத்து சேர்த்து வைத்திருக்கும் ரஜினிகாந்த் பணம் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதேநேரம், பணத்தின் முக்கியத்துவம் ரஜினிக்கு நன்றாகத் தெரியும். பணம் முக்கியம் இல்லை என்று மேடையில் பேசும் ரஜினிகாந்த், பணம் வாங்காமல் சினிமாவில் நடிக்க மாட்டார். கோடியில் சம்பளம் வாங்குவதால் டிரைவருக்கும் வாட்ச்மேனுக்கும் சம்பளம் அள்ளிக் கொடுக்க மாட்டார். சொந்தப் படம் எடுத்து பணம் நஷ்டமாகும் ரிஸ்க் எடுக்க மாட்டார். எனவே, ரஜினியின் மேடைப் பேச்சை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்.

மதிப்பு கொடுக்காதவர் வீட்டில் யாரும் தங்குவதற்கு விரும்ப மாட்டார்கள். பணத்துக்கும் அந்த குணம் உண்டு. எனவே பணத்தை நிஜமாக மதிக்க வேண்டும். பணம் வரும்போது கொண்டாடுங்கள்.

அதேநேரம் செலவு செய்வதற்கு ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள். செலவுகளை எழுதி வைத்து ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்யுங்கள். வருமானத்துக்குள் செலவு செய்வதற்குக் கற்றுக்கொண்டால், நீங்களும் பணக்காரர் ஆகிவிடலாம். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment