மாடிப்படி ஏற முடியலையா.?

டாக்டர் எஸ்.கே.ராமசுப்பிரமணியம், ஹோமியோபதி மருத்துவர்

நான்கில் ஒரு மனிதருக்கு மூட்டு வலி இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு எளிய தீர்வு சொல்கிறார் மருத்துவர்

சாதாரணமாக படிகளில் தாவிக் குதித்து ஏறுபவராக இருப்பார். அவருக்கு திடீரென இரண்டாவது மாடி ஏறுவதற்கே சிரமம் ஏற்படலாம். இது போன்ற நிலைக்கு, மூட்டு வலியே முக்கிய காரணமாக இருக்கிறது.

மூட்டு வலி என்பது வயதானவர்களுக்கு மட்டும் வரும் பிரச்சினை என்ற எண்ணம் தவறானது. இளம் வயதினருக்கும் வரலாம். காயம், உடல் எடை அதிகரிப்பு, அதிக உடற்பயிற்சி, நீண்ட நேரம் ஒரே நிலையில் இருப்பது, தசை பலவீனம், நோய் பாதிப்பு போன்ற காரணங்களால் மூட்டு வலி ஏற்படலாம். குறிப்பாக முழங்கால், இடுப்பு, தோள்பட்டை, மணிக்கட்டு, விரல்கள் போன்ற மூட்டுகளில் இது அதிகமாகக் காணப்படுகிறது.

எலும்புகள் சந்திக்கும் இடங்களில் குருத்தெலும்பு, மூட்டு திரவம், தசைகள், தசைநார்கள் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் வலி, வீக்கம், இறுக்கம், இயக்கக் குறைவு ஏற்படலாம்.

1. மூட்டு தேய்மானம்
வயது அதிகரிக்கும்போது மூட்டில் உள்ள குருத்தெலும்பு மெதுவாக தேயலாம். இதனால் எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து வலி மற்றும் இறுக்கம் ஏற்படலாம். முழங்கால், இடுப்பு, கை விரல்கள் போன்ற இடங்களில் இது பொதுவாகக் காணப்படுகிறது. அதிக உடல் எடை மூட்டுகளின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துவதால் ஆபத்தை அதிகரிக்கலாம்.

2. முடக்குவாதம்
இது சாதாரண தேய்மானம் அல்ல. நோய் எதிர்ப்பு மண்டலம் தவறாக மூட்டின் உள் உறையைத் தாக்குவதால் உருவாகும் நோய். மூட்டு வீக்கம், வலி, குறிப்பாக காலையில் நீண்ட நேரம் இறுக்கமாக இருப்பது போன்ற அறிகுறிகள் இருக்கலாம். சிகிச்சை தாமதமானால் நிரந்தர மூட்டு சேதம் ஏற்படக்கூடும்.

3. காயங்கள்:
விளையாட்டு, விழுதல், விபத்து அல்லது தவறான முறையில் அதிக எடையைத் தூக்குதல் போன்றவற்றால் தசைநார், லிக்மென்ட், கார்டிலேஜ் ஆகியவை பாதிக்கப்பட்டு மூட்டு வலி ஏற்படலாம்.

பொதுவாக உடல் எடை அதிகரித்தல், உடற்பயிற்சி இல்லாமை, நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது போன்றவை மூட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள தசைகளின் செயல்திறனை குறைக்கலாம். இது தவிர யூரிக் அமிலம் தொடர்பான நோய்கள், சில தொற்றுகள் மற்றும் பிற அழற்சி நோய்களும் மூட்டு வலிக்குக் காரணமாக இருக்கலாம்.

மூட்டு வலிவந்த பிறகு சிகிச்சை” என்பதைக் காட்டிலும் வலி வராமல் பராமரிப்பது ஆரோக்கிய வழிமுறை.

  • உடல் பருமன் முதல் எதிரி. எனவே, எடை குறிப்பாக முழங்கால் மற்றும் இடுப்பு மூட்டுகளுக்கு கூடுதல் சுமை ஏற்படுத்தாத வகையில். உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியமானது.
  • நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிளிங் போன்ற மூட்டுகளுக்கு அதிக வேலை தரும் பயிற்சிகளை பிசியோதெரபிஸ்ட் அல்லது மருத்துவர் ஆலோசனையுடன் மட்டுமே செய்ய வேண்டும்.
  • தொடர்ந்து பல மணி நேரம் ஒரே இடத்தில் ஒரே நிலையில் உட்கார்ந்து இருப்பதைத் தவிர்த்து இடையிடையே எழுந்து நடப்பது நல்லது.
  • காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள், பருப்பு வகைகள், போதுமான புரதம் உள்ளிட்ட சமச்சீர் உணவைத் தேர்வு செய்வது உடல் எடை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.
  • சாதாரண வீக்கம், கடுமையான வலி, மூட்டு அசையாமை அல்லது காயத்துக்குப் பிறகு தொடர்ந்து வலி இருந்தால் மருத்துவரிடம் பரிசோதனை அவசியம்.

மூட்டு திடீரென மிகவும் வீங்குதல், காய்ச்சலுடன் மூட்டு வலி, கடுமையான காயத்துக்குப் பிறகு வலி, மூட்டை அசைக்க முடியாத நிலை, தொடர்ந்து அதிகரிக்கும் வலி, அல்லது பல மூட்டுகளில் நீடித்த வீக்கம் போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

மூட்டு வலிக்கு ஹோமியோபதி

மூட்டு வலி என்பது தனிப்பட்ட ஒரு நோய் அல்ல. அது பல்வேறு நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். எனவே வலி நிவாரணி மாத்திரை போட்டால் போதும் என்ற எண்ணம் சரியானது இல்லை. மூட்டுவலிக்குக் காரணம் கண்டறிவதே சரியான மருத்துவ அணுகுமுறை.

உடல் எடைக் கட்டுப்பாடு, முறையான உடற்பயிற்சி, தசை வலிமை, சரியான உணவு, காயங்களைத் தவிர்த்தல் மற்றும் தேவையானபோது அறிவியல் அடிப்படையிலான மருத்துவ சிகிச்சையே நீண்ட காலத்திற்கு மூட்டுகளைப் பாதுகாக்கும் முக்கியமான வழிகள்.

ஹோமியோபதி மருத்துவத்தில், நோயாளியின் அறிகுறிகள் மற்றும் தனிப்பட்ட தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஒவ்வொரு நபருக்கும் முழுமையாக பரிசோதனை செய்து, மருந்துகள் பரிந்துரைக்கப்படுவதால் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பமுடியும்.

அறுவை சிகிச்சைகள் இல்லாமல் வாழ்நாள் முழுவதும் மூட்டுகளை இயல்பாக செயல்பட வைப்பதற்கு ஹோமியோபதியில் நல்ல மருந்துகள் உள்ளன. எனவே, மூட்டு வலிக்கு அச்சம் வேண்டாம்.

தொடர்புக்கு : 9841108754

Leave a Comment